• Nov 24 2024

உக்ரைன் இராணுவத்தில் இலங்கையர்கள்...!ரஷ்யா தொடர்பில் இரட்டை நிலைப்பாட்டை பின்பற்ற வேண்டாம்...! ரஷ்ய தூதுவர் வலியுறுத்து...!

Sharmi / May 31st 2024, 9:38 am
image

வெளிநாட்டவர்கள் தாமாக முன்வந்து ரஷ்ய இராணுவத்தில் இணைய முடியும் என இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ். ஜாகர்யன் தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சில் நேற்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

வெளிநாட்டவர்கள் ரஷ்ய இராணுவத்தில் சேருவதை ரஷ்ய சட்டம் தடுக்கவில்லை. தேவையான ஆவணங்கள் மட்டுமே அங்கு சரிபார்க்கப்படும் என்றும் விசா வழங்கப்பட மாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்ய இராணுவத்தில் பாலினம் பாராமல் அனைவரும் நேர்காணல் செய்யப்படுவார்கள். ரஷ்ய இராணுவத்தில் இணைந்தவர்கள் இந்நாட்டின் பிரதிநிதிகள் ஊடாக ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளதாகவும், அது தொடர்பில் ரஷ்ய தூதரகத்திற்கு அறிவிக்கப்படவில்லை எனவும் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, நேர்காணலின் போது, ​​ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது தொடர்பாக அவர்கள் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்று ரஷ்ய தூதர் லெவன் இதன்போது  சுட்டிக்காட்டினார்.

ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்களால் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் சமூக வலைத்தளங்கள் ஊடாக பகிரப்பட்டு வருகின்றமை  தொடர்பில் கருத்து தெரிவித்த தூதுவர், அது ரஷ்ய பாதுகாப்பு அமைச்சின் உடன்படிக்கையா என்பது குறித்து தற்போது எதுவும் கூற முடியாது என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

ரஷ்ய இராணுவத்தில் இணைந்த இலங்கையர்கள் பற்றி ஊடகங்கள் அதிக விளம்பரம் கொடுக்கின்றன.

எவ்வாறாயினும், இலங்கையர்கள் உக்ரைன் இராணுவத்தில் கூலிப்படையாக இணைவது குறித்து எவரும் பேசுவதில்லை எனவும் ரஷ்ய தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முறைப்பாடுகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என்பதற்காக இலங்கையர்கள் உக்ரைன் இராணுவத்தில் இணையவில்லை என்று அர்த்தமில்லை எனவும் உக்ரைன் இராணுவத்தில் இலங்கையர்கள் இருப்பதாகவும், எனவே ரஷ்யா தொடர்பில் இரட்டை நிலைப்பாட்டை பின்பற்ற வேண்டாம் எனவும் தூதுவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


உக்ரைன் இராணுவத்தில் இலங்கையர்கள்.ரஷ்யா தொடர்பில் இரட்டை நிலைப்பாட்டை பின்பற்ற வேண்டாம். ரஷ்ய தூதுவர் வலியுறுத்து. வெளிநாட்டவர்கள் தாமாக முன்வந்து ரஷ்ய இராணுவத்தில் இணைய முடியும் என இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ். ஜாகர்யன் தெரிவித்துள்ளார்.வெளிவிவகார அமைச்சில் நேற்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.வெளிநாட்டவர்கள் ரஷ்ய இராணுவத்தில் சேருவதை ரஷ்ய சட்டம் தடுக்கவில்லை. தேவையான ஆவணங்கள் மட்டுமே அங்கு சரிபார்க்கப்படும் என்றும் விசா வழங்கப்பட மாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.ரஷ்ய இராணுவத்தில் பாலினம் பாராமல் அனைவரும் நேர்காணல் செய்யப்படுவார்கள். ரஷ்ய இராணுவத்தில் இணைந்தவர்கள் இந்நாட்டின் பிரதிநிதிகள் ஊடாக ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளதாகவும், அது தொடர்பில் ரஷ்ய தூதரகத்திற்கு அறிவிக்கப்படவில்லை எனவும் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.அதேவேளை, நேர்காணலின் போது, ​​ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது தொடர்பாக அவர்கள் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்று ரஷ்ய தூதர் லெவன் இதன்போது  சுட்டிக்காட்டினார்.ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்களால் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் சமூக வலைத்தளங்கள் ஊடாக பகிரப்பட்டு வருகின்றமை  தொடர்பில் கருத்து தெரிவித்த தூதுவர், அது ரஷ்ய பாதுகாப்பு அமைச்சின் உடன்படிக்கையா என்பது குறித்து தற்போது எதுவும் கூற முடியாது என தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.ரஷ்ய இராணுவத்தில் இணைந்த இலங்கையர்கள் பற்றி ஊடகங்கள் அதிக விளம்பரம் கொடுக்கின்றன.எவ்வாறாயினும், இலங்கையர்கள் உக்ரைன் இராணுவத்தில் கூலிப்படையாக இணைவது குறித்து எவரும் பேசுவதில்லை எனவும் ரஷ்ய தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.முறைப்பாடுகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என்பதற்காக இலங்கையர்கள் உக்ரைன் இராணுவத்தில் இணையவில்லை என்று அர்த்தமில்லை எனவும் உக்ரைன் இராணுவத்தில் இலங்கையர்கள் இருப்பதாகவும், எனவே ரஷ்யா தொடர்பில் இரட்டை நிலைப்பாட்டை பின்பற்ற வேண்டாம் எனவும் தூதுவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement