மட்டக்களப்பு, சத்துருக்கொண்டானில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவிப் பொதுமக்களுக்காக அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபி புனர்நிர்மாணம் செய்யப்பட்டு அதில் இராணுவத்தால் படுகொலை செய்யப்படவர்கள் என்ற பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு இன்று பதிக்கப்பட்டது. இதனைப் பொலிஸார் பலவந்தமாகக் கழற்றி எடுத்ததையடுத்து அங்கு பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் பெரும் முறுகல் நிலை ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு மேலதிக பொலிஸாரும், இராணுவத்தினரும் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது.
1990 ஆம் ஆண்டு செட்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி கொக்குவில், பனிச்சையடி, பிள்ளையாரடி, சத்துருக்கொண்டான் உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த 85 பெண்கள், 10 வயதுக்கு உட்பட்ட 42 சிறுவர்கள், 25 வயோதிபர்கள் உட்பட 186 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
இராணுவத்தினராலும், ஊர்காவல் படையினராலும், ஒட்டுக்குழுவினராலும் இந்தப் படுகொலை அரங்கேற்றப்பட்டிருந்தது. இந்தப் படுகொலையின் 34 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்றாகும்.
இந்த நினைவேந்தலைச் செய்வதற்காகப் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று ஆயத்தம் செய்து கொண்டிருந்த வேளையில் மேற்படி அராஜகச் செயலில் பொலிஸார் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து பொலிஸ் ஜீப் வாகனத்தில் இழுத்து ஏற்றப்பட்ட சமூகச் செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட 7 பேரிடமும் வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் அவர்களைப் பொலிஸார் அங்கு இறக்கி விட்டனர்.
மட்டு. சத்துருக்கொண்டான் படுகொலை நினைவுத்தூபியில் பொலிஸார் அராஜகம் - நினைவேந்தல் நாளில் குழப்பம் மட்டக்களப்பு, சத்துருக்கொண்டானில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவிப் பொதுமக்களுக்காக அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபி புனர்நிர்மாணம் செய்யப்பட்டு அதில் இராணுவத்தால் படுகொலை செய்யப்படவர்கள் என்ற பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு இன்று பதிக்கப்பட்டது. இதனைப் பொலிஸார் பலவந்தமாகக் கழற்றி எடுத்ததையடுத்து அங்கு பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் பெரும் முறுகல் நிலை ஏற்பட்டது. இதையடுத்து அங்கு மேலதிக பொலிஸாரும், இராணுவத்தினரும் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது.1990 ஆம் ஆண்டு செட்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி கொக்குவில், பனிச்சையடி, பிள்ளையாரடி, சத்துருக்கொண்டான் உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த 85 பெண்கள், 10 வயதுக்கு உட்பட்ட 42 சிறுவர்கள், 25 வயோதிபர்கள் உட்பட 186 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இராணுவத்தினராலும், ஊர்காவல் படையினராலும், ஒட்டுக்குழுவினராலும் இந்தப் படுகொலை அரங்கேற்றப்பட்டிருந்தது. இந்தப் படுகொலையின் 34 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்றாகும்.இந்த நினைவேந்தலைச் செய்வதற்காகப் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று ஆயத்தம் செய்து கொண்டிருந்த வேளையில் மேற்படி அராஜகச் செயலில் பொலிஸார் ஈடுபட்டனர்.இதனைத் தொடர்ந்து பொலிஸ் ஜீப் வாகனத்தில் இழுத்து ஏற்றப்பட்ட சமூகச் செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட 7 பேரிடமும் வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் அவர்களைப் பொலிஸார் அங்கு இறக்கி விட்டனர்.