• May 18 2024

பெண் அரச உத்தியோகத்தரை அச்சுறுத்திய இராஜாங்க அமைச்சர்..! விசாரணை நடத்துமாறு கோரிக்கை

Chithra / Apr 11th 2024, 8:36 am
image

Advertisement

 

அமைச்சு அதிகாரிகள் முன்னிலையில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசாநாயக்க, அரச உத்தியோகத்தர் ஒருவரை அச்சுறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

லங்கா பொஸ்பேட் நிறுவனத்தின் மனித வள மற்றும் நிர்வாக உதவியாளரான வீ.சே.சந்திரரட்ன என்ற பெண் உத்தியோகத்தர் இவ்வாறு அச்சுறுத்தப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கூட்டமொன்றிற்கு அழைத்து அதிகாரிகள் முன்னிலையில் தம்மை மோசமாக அச்சுறுத்தியதாகவும், இழிவாக பேசியதாகவும் குறித்த பெண் உத்தியோகத்தர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த பெண் உத்தியோகத்தர், ஊழியர் ஒருவரை துன்புறுத்தினார் என குற்றம் சுமத்தியே இராஜாங்க அமைச்சர் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இவ்வாறு உத்தியோகத்தர்கள் எதிர்வரும் காலங்களில் அச்சுறுத்தப்பட்டால் தொழிற்சங்க நடவடிக்கை எடுக்க நேரிடும் என ஶ்ரீலங்கா சுதந்திர தொழிலாளர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

பெண் அரச உத்தியோகத்தரை அச்சுறுத்திய இராஜாங்க அமைச்சர். விசாரணை நடத்துமாறு கோரிக்கை  அமைச்சு அதிகாரிகள் முன்னிலையில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசாநாயக்க, அரச உத்தியோகத்தர் ஒருவரை அச்சுறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.லங்கா பொஸ்பேட் நிறுவனத்தின் மனித வள மற்றும் நிர்வாக உதவியாளரான வீ.சே.சந்திரரட்ன என்ற பெண் உத்தியோகத்தர் இவ்வாறு அச்சுறுத்தப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கூட்டமொன்றிற்கு அழைத்து அதிகாரிகள் முன்னிலையில் தம்மை மோசமாக அச்சுறுத்தியதாகவும், இழிவாக பேசியதாகவும் குறித்த பெண் உத்தியோகத்தர் குற்றம் சுமத்தியுள்ளார்.இந்த பெண் உத்தியோகத்தர், ஊழியர் ஒருவரை துன்புறுத்தினார் என குற்றம் சுமத்தியே இராஜாங்க அமைச்சர் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை, இவ்வாறு உத்தியோகத்தர்கள் எதிர்வரும் காலங்களில் அச்சுறுத்தப்பட்டால் தொழிற்சங்க நடவடிக்கை எடுக்க நேரிடும் என ஶ்ரீலங்கா சுதந்திர தொழிலாளர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement