• Sep 19 2024

இராஜாங்க அமைச்சர் பயணித்த வாகனத்துடன் மோதிய கார்! பொலிஸ் அதிகாரி கைது

Chithra / Sep 16th 2024, 11:45 am
image

Advertisement


பொலிஸ் அதிகாரி செலுத்திச் சென்ற கார் ஒன்று நிதி இராஜாங்க அமைச்சர் ஷெயான் சேமசிங்க பயணித்த வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் - சிலாபம் வீதியில் பாலவிய பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து, காரினை செலுத்திச் சென்ற பொலிஸ் அதிகாரி புத்தளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், இந்த பொலிஸ் அதிகாரி மது போதையில் காரை செலுத்தினாரா என்பது குறித்து, பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இராஜாங்க அமைச்சர் பயணித்த வாகனத்துடன் மோதிய கார் பொலிஸ் அதிகாரி கைது பொலிஸ் அதிகாரி செலுத்திச் சென்ற கார் ஒன்று நிதி இராஜாங்க அமைச்சர் ஷெயான் சேமசிங்க பயணித்த வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.புத்தளம் - சிலாபம் வீதியில் பாலவிய பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.இதனையடுத்து, காரினை செலுத்திச் சென்ற பொலிஸ் அதிகாரி புத்தளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.புத்தளம் பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும், இந்த பொலிஸ் அதிகாரி மது போதையில் காரை செலுத்தினாரா என்பது குறித்து, பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement