புலனாய்வுத் திணைக்களத்தால் அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்ட அறிக்கையின்படி, பாதாள உலகக் குழுவினர் மற்றும் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் அரசியல்வாதிகள், பொலிஸ் அதிகாரிகள், சிறைச்சாலை அதிகாரிகள் என சுமார் இரண்டாயிரம் அரச அதிகாரிகள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலைமை மாற்றப்படும் வரை பாதாள உலகத்தை ஒடுக்குவது கடினமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலகப் புள்ளிகளை விடுவிப்பதற்காக பல்வேறு நிலைகளில் உள்ள அரசியல்வாதிகள் பொலிஸார் ஊடாக தலையிட்டுள்ளமையும் தெரியவந்துள்ளதாகவும் உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
சில அரசியல்வாதிகளுடன் பாதாள உலகக் குழுவினர் தொடர்பில் இருப்பதாகவும் அந்த அரசியல்வாதிகளிடமிருந்து இவர்களுக்கு உயர் பாதுகாப்பு கிடைப்பதை அறிய முடிவதாகவும் புலனாய்வுத்துறை வட்டாரங்கள் மேலும் கூறியுள்ளன.
பாதாள உலகக் குழுவினருக்கும் குற்றவாளிகளுக்கும் அடைக்கலம் கொடுக்கும் அரச அதிகாரிகள் வெளியான அதிர்ச்சித் தகவல் புலனாய்வுத் திணைக்களத்தால் அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்ட அறிக்கையின்படி, பாதாள உலகக் குழுவினர் மற்றும் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் அரசியல்வாதிகள், பொலிஸ் அதிகாரிகள், சிறைச்சாலை அதிகாரிகள் என சுமார் இரண்டாயிரம் அரச அதிகாரிகள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த நிலைமை மாற்றப்படும் வரை பாதாள உலகத்தை ஒடுக்குவது கடினமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலகப் புள்ளிகளை விடுவிப்பதற்காக பல்வேறு நிலைகளில் உள்ள அரசியல்வாதிகள் பொலிஸார் ஊடாக தலையிட்டுள்ளமையும் தெரியவந்துள்ளதாகவும் உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.சில அரசியல்வாதிகளுடன் பாதாள உலகக் குழுவினர் தொடர்பில் இருப்பதாகவும் அந்த அரசியல்வாதிகளிடமிருந்து இவர்களுக்கு உயர் பாதுகாப்பு கிடைப்பதை அறிய முடிவதாகவும் புலனாய்வுத்துறை வட்டாரங்கள் மேலும் கூறியுள்ளன.