• Nov 06 2024

ஹட்டன் நகரில் உள்ள பல வீதிகளில் துர் நாற்றம் மற்றும் குப்பை மேடுகள்!

Tamil nila / Sep 17th 2024, 7:31 pm
image

Advertisement

ஹட்டன் நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து வீதியின் கரையோர பகுதியில் பாரிய அளவில் துர் நாற்றம் வீசும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக ஹட்டன் நகரில் இருந்து டம்பார் வீதியில் பல இடங்களில் குப்பைகள் கொட்டப் பட்டு ஹட்டன் நகர சபையால் அகற்ற படாமல் உள்ளதால் குடியிருப்பாளர்கள் பாதசாரிகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பெரிதும் பாதிக்க பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக ஹட்டன் நகரில் உள்ள பிரபல பாடசாலையான ஹைலன்ஸ் தேசிய கல்லூரிக்கு செல்லும் பிரதான வீதியில் பாரிய அளவில் குப்பைகள் கொட்டப் பட்டு உள்ளது.அதே போல சென் பொஸ்கோ கல்லூரிக்கு செல்லும் பிரதான வீதியில் பாரிய அளவில் குப்பைகள் கொட்டப் பட்டு துர் நாற்றம் வீசும் அபாயம் உள்ளது.

மேலும் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் வழியில் எங்கு பார்த்தாலும் குப்பை கொட்ட பட்டு ஆங்காங்கே தீ வைக்க பட்டு உள்ளது.

இதனால் சுகாதார சீர்கேடுடான நிலையில் ஹட்டன் நகரில் உள்ள அனைத்து பகுதிகளும் காணப்படுகின்றன.

இது குறித்து சம்பந்தப்பட்ட ஹட்டன் நகர சபை முன் வந்து உடன் இவ்வாறு உள்ள அனைத்து குப்பைகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர். 

ஹட்டன் நகரில் உள்ள பல வீதிகளில் துர் நாற்றம் மற்றும் குப்பை மேடுகள் ஹட்டன் நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து வீதியின் கரையோர பகுதியில் பாரிய அளவில் துர் நாற்றம் வீசும் அபாயம் ஏற்பட்டுள்ளது.குறிப்பாக ஹட்டன் நகரில் இருந்து டம்பார் வீதியில் பல இடங்களில் குப்பைகள் கொட்டப் பட்டு ஹட்டன் நகர சபையால் அகற்ற படாமல் உள்ளதால் குடியிருப்பாளர்கள் பாதசாரிகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பெரிதும் பாதிக்க பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.குறிப்பாக ஹட்டன் நகரில் உள்ள பிரபல பாடசாலையான ஹைலன்ஸ் தேசிய கல்லூரிக்கு செல்லும் பிரதான வீதியில் பாரிய அளவில் குப்பைகள் கொட்டப் பட்டு உள்ளது.அதே போல சென் பொஸ்கோ கல்லூரிக்கு செல்லும் பிரதான வீதியில் பாரிய அளவில் குப்பைகள் கொட்டப் பட்டு துர் நாற்றம் வீசும் அபாயம் உள்ளது.மேலும் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் வழியில் எங்கு பார்த்தாலும் குப்பை கொட்ட பட்டு ஆங்காங்கே தீ வைக்க பட்டு உள்ளது.இதனால் சுகாதார சீர்கேடுடான நிலையில் ஹட்டன் நகரில் உள்ள அனைத்து பகுதிகளும் காணப்படுகின்றன.இது குறித்து சம்பந்தப்பட்ட ஹட்டன் நகர சபை முன் வந்து உடன் இவ்வாறு உள்ள அனைத்து குப்பைகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement