• Nov 28 2024

தங்ககலை பகுதியில் வீடுகளை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் - மக்கள் கோரிக்கை

Tharmini / Oct 16th 2024, 2:59 pm
image

நுவரெலியா லிந்துலை தங்ககலை தோட்டத்தில் வீடில்லாத 25 குடும்பங்களுக்கு 2019 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தால் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் தனி வீடு திட்டம் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது. இலங்கை ஆட்சி செய்த அன்றைய அரசாங்கத்தால் இதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அடிக்கல்லும் நாட்டி வைக்கப்பட்டது.அப்போது பாராளுமன்ற உறுப்பினராக இருந்த மயில்வாகனம் திலகராஜ் இதில் கலந்து கொண்டு இருந்தார்.

வீடு கட்டுவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் அது கைவிடப்பட்ட நிலையில் தற்போது பற்றை காடாகி பாலைவனம் போல் காட்சி அளிக்கின்றது.பாதிக்கப்பட்ட 25 குடும்பங்கள் தொடர்ந்து எவ்வித அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் இருந்த வீட்டிலேயே வாழ்ந்து வருகின்றனர். இந்த வீடமைப்பு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் பொழுது இம்மக்கள் தங்களின் தங்க நகைகளை அடகு வைத்து கடன் வாங்கி வேலைகளை ஆரம்பிப்பதற்கு அதிகமான பணம் செலவு செய்யப்பட்டுள்ளனர். 

வீடு கட்டுவதற்கான கற்கள் சிமேந்து கற்கள் கொண்டுவரப்பட்ட போதிலும் தற்போது அது வீணாகி கிடக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். தற்போது தாங்கள் வசிக்கும் குடியிருப்பு 200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது மழை காலத்தில் கூறை வழியாக மழை நீர் கொட்டுவதால் தமக்கு உடனடியாக வீடுகளை கட்டித் தருமாறு இங்குள்ள மக்கள் அழுது கண்ணீர் வடிக்கின்றனர். 

அரசியல்வாதிகளிடம் வீட்டினை நிர்மாணித்து தருமாறு  கூறிய போதிலும் இப பகுதியில் உள்ள அரசியல் வாதிகள் இதுவரை கண்டு கொள்ளவில்லை தற்போது தேர்தல் காலம் என்பதால் தங்களுடைய வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காக அரசியல்வாதிகள் வருகை தந்தாலும் உடனடியாக வீடுகளை நிர்மாணித்து தருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பாதிப்பு மட்டும் மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

தங்ககலை பகுதியில் வீடுகளை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் - மக்கள் கோரிக்கை நுவரெலியா லிந்துலை தங்ககலை தோட்டத்தில் வீடில்லாத 25 குடும்பங்களுக்கு 2019 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தால் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் தனி வீடு திட்டம் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது. இலங்கை ஆட்சி செய்த அன்றைய அரசாங்கத்தால் இதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அடிக்கல்லும் நாட்டி வைக்கப்பட்டது.அப்போது பாராளுமன்ற உறுப்பினராக இருந்த மயில்வாகனம் திலகராஜ் இதில் கலந்து கொண்டு இருந்தார். வீடு கட்டுவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் அது கைவிடப்பட்ட நிலையில் தற்போது பற்றை காடாகி பாலைவனம் போல் காட்சி அளிக்கின்றது.பாதிக்கப்பட்ட 25 குடும்பங்கள் தொடர்ந்து எவ்வித அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் இருந்த வீட்டிலேயே வாழ்ந்து வருகின்றனர். இந்த வீடமைப்பு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் பொழுது இம்மக்கள் தங்களின் தங்க நகைகளை அடகு வைத்து கடன் வாங்கி வேலைகளை ஆரம்பிப்பதற்கு அதிகமான பணம் செலவு செய்யப்பட்டுள்ளனர். வீடு கட்டுவதற்கான கற்கள் சிமேந்து கற்கள் கொண்டுவரப்பட்ட போதிலும் தற்போது அது வீணாகி கிடக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். தற்போது தாங்கள் வசிக்கும் குடியிருப்பு 200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது மழை காலத்தில் கூறை வழியாக மழை நீர் கொட்டுவதால் தமக்கு உடனடியாக வீடுகளை கட்டித் தருமாறு இங்குள்ள மக்கள் அழுது கண்ணீர் வடிக்கின்றனர். அரசியல்வாதிகளிடம் வீட்டினை நிர்மாணித்து தருமாறு  கூறிய போதிலும் இப பகுதியில் உள்ள அரசியல் வாதிகள் இதுவரை கண்டு கொள்ளவில்லை தற்போது தேர்தல் காலம் என்பதால் தங்களுடைய வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காக அரசியல்வாதிகள் வருகை தந்தாலும் உடனடியாக வீடுகளை நிர்மாணித்து தருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பாதிப்பு மட்டும் மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement