• Mar 11 2025

E-சிகரெட் வைத்திருப்போரை கைது செய்ய நடவடிக்கை

Chithra / Mar 10th 2025, 9:33 am
image


நாட்டில் E-சிகரெட்டுகளைப் பயன்படுத்துபவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

வேப்பிங் அல்லது E-சிகரெட்டுகள் சட்டவிரோதமானது என்று பாராளுமன்ற நிதிக்குழுவில் தெரியவந்துள்ளது. 

அதை ஒழுங்குபடுத்துவதற்கான ஒரு திட்டம் தற்போது உருவாக்கப்பட்டுள்ளதாகவும் மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.  

இதற்கிடையில், ஏப்ரல் முதலாம் திகதி முதல் சிகரெட்டுகளுக்கு விதிக்கப்படும் நிறுவன வருமான வரியை 45% ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இலங்கையில் சிகரெட் வரி படிப்படியாகக் குறைந்து வருவதாக தெரிவித்த பொது நிதி பற்றிய குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா, சிகரெட்டுகள் மீதான வரியை அதிகரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்கான வழிமுறைகள் தொடர்பிலும் ஆலோசனை வழங்கினார்.


E-சிகரெட் வைத்திருப்போரை கைது செய்ய நடவடிக்கை நாட்டில் E-சிகரெட்டுகளைப் பயன்படுத்துபவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. வேப்பிங் அல்லது E-சிகரெட்டுகள் சட்டவிரோதமானது என்று பாராளுமன்ற நிதிக்குழுவில் தெரியவந்துள்ளது. அதை ஒழுங்குபடுத்துவதற்கான ஒரு திட்டம் தற்போது உருவாக்கப்பட்டுள்ளதாகவும் மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.  இதற்கிடையில், ஏப்ரல் முதலாம் திகதி முதல் சிகரெட்டுகளுக்கு விதிக்கப்படும் நிறுவன வருமான வரியை 45% ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் சிகரெட் வரி படிப்படியாகக் குறைந்து வருவதாக தெரிவித்த பொது நிதி பற்றிய குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா, சிகரெட்டுகள் மீதான வரியை அதிகரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்கான வழிமுறைகள் தொடர்பிலும் ஆலோசனை வழங்கினார்.

Advertisement

Advertisement

Advertisement