2026 ஆம் ஆண்டு தரம் 1 இன் II மற்றும் III ஆம் தவணைகளுக்குரிய செயற்பாட்டுப் புத்தகங்களை விநியோகிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 2026.04.30 ஆம் திகதியளவில் அனைத்துப் பாடசாலைகளுக்கும் அவற்றை விநியோகித்து முடிக்க கல்வி அமைச்சு திட்டமிடப்பட்டுள்ளது.
தரம் 1 பாடத்திட்டம் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் ஆசிரியர் பயிற்சிகள், மாகாண ஆரம்பக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரியர் ஆலோசகர்கள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன.
மேலதிகமாகத் தேவைப்படும் பயிற்சிகளை 2026.05.16 ஆம் திகதிக்குள் நிறைவு செய்யுமாறு மாகாணப் பணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், தரம் 1 இன் முதலாம் தவணைக்குரிய பாடப்பரப்புகளைப் பூர்த்தி செய்ய முடியாத பாடசாலைகள் காணப்படின், எதிர்வரும் இரண்டாம் தவணையில் அந்தப் பாடப்பகுதிகளைப் பூர்த்தி செய்வதற்கு அதிபர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவெவ தெரிவித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டில் தரம் 1 கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை 2026 ஆம் ஆண்டு தரம் 1 இன் II மற்றும் III ஆம் தவணைகளுக்குரிய செயற்பாட்டுப் புத்தகங்களை விநியோகிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 2026.04.30 ஆம் திகதியளவில் அனைத்துப் பாடசாலைகளுக்கும் அவற்றை விநியோகித்து முடிக்க கல்வி அமைச்சு திட்டமிடப்பட்டுள்ளது.தரம் 1 பாடத்திட்டம் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் ஆசிரியர் பயிற்சிகள், மாகாண ஆரம்பக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரியர் ஆலோசகர்கள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன.மேலதிகமாகத் தேவைப்படும் பயிற்சிகளை 2026.05.16 ஆம் திகதிக்குள் நிறைவு செய்யுமாறு மாகாணப் பணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.மேலும், தரம் 1 இன் முதலாம் தவணைக்குரிய பாடப்பரப்புகளைப் பூர்த்தி செய்ய முடியாத பாடசாலைகள் காணப்படின், எதிர்வரும் இரண்டாம் தவணையில் அந்தப் பாடப்பகுதிகளைப் பூர்த்தி செய்வதற்கு அதிபர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவெவ தெரிவித்துள்ளார்.