• Nov 28 2024

பாடசாலை மாணவர்களின் சுமைகளைக் குறைக்க நடவடிக்கை! சுற்றுநிருபம் வெளியீடு

Chithra / Mar 4th 2024, 12:14 pm
image

பாடசாலை மாணவர்களின் புத்தகப்பைகளின் எடை குறைப்பு தொடர்பான சுற்றுநிருபம் இன்று பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாண கல்வி செயலாளர் சிறிசோம லொக்குவிதான இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களின் புத்தகப்பை எடை அதிகரிப்பு குறித்து ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், பாடசாலை புத்தகங்களுக்கு பதிலீடாக ஸ்மார்ட் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் புத்தக பை எடையை குறைக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களினால் புத்தக பையின் எடையை தாங்கிக்கொள்ள முடியவில்லை எனவும், புத்தகப்பையின் எடையை குறைக்கும் சில வழிமுறைகள் அறிமுகம் செய்யப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வகுப்பறையிலேயே புத்தகங்களை பாதுகாப்பாக வைத்துச்செல்லும் நடைமுறையொன்றை பின்பற்ற முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கணனி சாதனங்களை பயன்படுத்துவதன் மூலம் புத்தக பையின் எடையை குறைக்க முடியும் எனவும் கூறியுள்ளார். 

பாடசாலை மாணவர்களின் சுமைகளைக் குறைக்க நடவடிக்கை சுற்றுநிருபம் வெளியீடு பாடசாலை மாணவர்களின் புத்தகப்பைகளின் எடை குறைப்பு தொடர்பான சுற்றுநிருபம் இன்று பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.மேல் மாகாண கல்வி செயலாளர் சிறிசோம லொக்குவிதான இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.பாடசாலை மாணவர்களின் புத்தகப்பை எடை அதிகரிப்பு குறித்து ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.இந்நிலையில், பாடசாலை புத்தகங்களுக்கு பதிலீடாக ஸ்மார்ட் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் புத்தக பை எடையை குறைக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.பாடசாலை மாணவர்களினால் புத்தக பையின் எடையை தாங்கிக்கொள்ள முடியவில்லை எனவும், புத்தகப்பையின் எடையை குறைக்கும் சில வழிமுறைகள் அறிமுகம் செய்யப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.வகுப்பறையிலேயே புத்தகங்களை பாதுகாப்பாக வைத்துச்செல்லும் நடைமுறையொன்றை பின்பற்ற முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.கணனி சாதனங்களை பயன்படுத்துவதன் மூலம் புத்தக பையின் எடையை குறைக்க முடியும் எனவும் கூறியுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement