• May 17 2024

பாடசாலைகளுக்குள் அதிரடியாக களமிறங்கும் STF அதிகாரிகள்?

Sharmi / Dec 2nd 2022, 8:54 am
image

Advertisement

பாடசாலைகளில் போதைப்பொருள் பயன்பாட்டை தடுப்பதற்கு விசேட செயலணியொன்றை ஸ்தாபிக்கின்றமை தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விடயம் தொடர்பில் கொழும்பில் நேற்றையதினம் ஊடகங்களுக்கு  கருத்து தெரிவித்த பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ளு.ஹெட்டியாராச்சி,

மேல் மற்றும் தென் மாகாணங்களுக்கு மேலதிகமாக குருநாகல் மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களிலும் பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஏனைய கடமைகளில் இருந்து நீக்கப்பட்டு, எதிர்காலத்தில் போதைப்பொருள் மற்றும் திட்டமிட்ட  குற்றங்களில் ஈடுபடும் குழுக்களுக்கு எதிராக மாத்திரம் பயன்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும்  அவர் மேலும் கூறியுள்ளார்.

இலங்கையில் வருடாந்தம் சுமார் 1100 முதல் 2000 கிலோகிராம் வரையான ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்படுகின்றது.

கொழும்பு மாவட்டத்திலேயே ஹெரோயின் போதைப்பொருள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாகவும் ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர் சமூகத்தினரிடையே பல்வேறு போதைப் பொருட்களை விநியோகிப்பதற்கான திட்டங்கள் கடத்தல்காரர்களினால் ஆரம்பித்துள்ளமையும் அவதானிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளுக்குள் அதிரடியாக களமிறங்கும் STF அதிகாரிகள் பாடசாலைகளில் போதைப்பொருள் பயன்பாட்டை தடுப்பதற்கு விசேட செயலணியொன்றை ஸ்தாபிக்கின்றமை தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த விடயம் தொடர்பில் கொழும்பில் நேற்றையதினம் ஊடகங்களுக்கு  கருத்து தெரிவித்த பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ளு.ஹெட்டியாராச்சி,மேல் மற்றும் தென் மாகாணங்களுக்கு மேலதிகமாக குருநாகல் மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களிலும் பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஏனைய கடமைகளில் இருந்து நீக்கப்பட்டு, எதிர்காலத்தில் போதைப்பொருள் மற்றும் திட்டமிட்ட  குற்றங்களில் ஈடுபடும் குழுக்களுக்கு எதிராக மாத்திரம் பயன்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும்  அவர் மேலும் கூறியுள்ளார்.இலங்கையில் வருடாந்தம் சுமார் 1100 முதல் 2000 கிலோகிராம் வரையான ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்படுகின்றது.கொழும்பு மாவட்டத்திலேயே ஹெரோயின் போதைப்பொருள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாகவும் ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர் சமூகத்தினரிடையே பல்வேறு போதைப் பொருட்களை விநியோகிப்பதற்கான திட்டங்கள் கடத்தல்காரர்களினால் ஆரம்பித்துள்ளமையும் அவதானிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement