• Nov 26 2024

பொய்யான தகவல்களை வழங்குபவர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை - பொலிஸார் எச்சரிக்கை

Chithra / Nov 7th 2024, 9:42 am
image


அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட பின்னர் அறிமுகப்படுத்தப்பட்ட 1997 அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த நூற்றுக்கும் மேற்பட்ட முறைப்பாடுகளில் 18 முறைப்பாடுகள் மட்டுமே சரியானவை என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தகவல்கள் பொய்யானவை எனவும் தெரிவித்தார்.

மேலும், இதுபோன்ற பொய்யான தகவல்களை வழங்குபவர்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று   நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்தார்.  

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவின் வீட்டில் சட்டவிரோதமான முறையில் வாகனம் ஒன்று இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அண்மையில் சோதனை நடத்தப்பட்டது.

எம்.பி.யின் வீட்டில் அவ்வாறான வாகனம் எதுவும் காணப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தூதுவர்கள், இராஜதந்திரிகள் மற்றும் பிரபல வர்த்தகர்கள் வசிக்கும் ஷங்ரிலா சொகுசு கட்டடத் தொகுதியில் வாகனம் ஒன்றில் வெடிகுண்டு இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கடந்த சனிக்கிழமை சோதனை நடத்தப்பட்டதாக ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

அன்றைய தினம் அவ்வாறான வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என  அவர்  தெரிவித்தார்.  


பொய்யான தகவல்களை வழங்குபவர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை - பொலிஸார் எச்சரிக்கை அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட பின்னர் அறிமுகப்படுத்தப்பட்ட 1997 அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த நூற்றுக்கும் மேற்பட்ட முறைப்பாடுகளில் 18 முறைப்பாடுகள் மட்டுமே சரியானவை என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தகவல்கள் பொய்யானவை எனவும் தெரிவித்தார்.மேலும், இதுபோன்ற பொய்யான தகவல்களை வழங்குபவர்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று   நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்தார்.  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவின் வீட்டில் சட்டவிரோதமான முறையில் வாகனம் ஒன்று இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அண்மையில் சோதனை நடத்தப்பட்டது.எம்.பி.யின் வீட்டில் அவ்வாறான வாகனம் எதுவும் காணப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.இதேவேளை, தூதுவர்கள், இராஜதந்திரிகள் மற்றும் பிரபல வர்த்தகர்கள் வசிக்கும் ஷங்ரிலா சொகுசு கட்டடத் தொகுதியில் வாகனம் ஒன்றில் வெடிகுண்டு இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கடந்த சனிக்கிழமை சோதனை நடத்தப்பட்டதாக ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.அன்றைய தினம் அவ்வாறான வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என  அவர்  தெரிவித்தார்.  

Advertisement

Advertisement

Advertisement