இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவில் இரண்டு மணி நேர இடைவெளியில், இரண்டு முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்த வகையில் வடக்கு சுமத்ராவில் பூமிக்கு அடியில் 65 கிலோ மீட்டர் ஆழத்தில் நேற்று இரவு 7 மணியளவில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்பின்னர் இரவு 9 மணியளவில் 4.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
ரிக்டர் அளவில் 5.8 என்ற அளவு மிதமான சக்தி வாய்ந்த நிலநடுக்கமாக கருதப்பட்டாலும், அடர்ந்த மக்கள் தொகை பகுதிகளில் இது சிறிய சேதங்களை ஏற்படுத்தியிருக்கலாம் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை எனவும் தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவில் இரண்டு மணி நேர இடைவெளியில், இரண்டு முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த வகையில் வடக்கு சுமத்ராவில் பூமிக்கு அடியில் 65 கிலோ மீட்டர் ஆழத்தில் நேற்று இரவு 7 மணியளவில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அதன்பின்னர் இரவு 9 மணியளவில் 4.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.ரிக்டர் அளவில் 5.8 என்ற அளவு மிதமான சக்தி வாய்ந்த நிலநடுக்கமாக கருதப்பட்டாலும், அடர்ந்த மக்கள் தொகை பகுதிகளில் இது சிறிய சேதங்களை ஏற்படுத்தியிருக்கலாம் தெரிவிக்கப்படுகிறது. மேலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை எனவும் தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.