கொழும்பு பங்கு சந்தை 5 சத வீதத்துக்கும் மேலாக நேற்றைய தினம் சரிவைச் சந்தித்துள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனால், வழக்கமான வர்த்தக நடவடிக்கைகள் சுமார் 30 நிமிடங்கள் நிறுத்தப்பட்டன.
இதன்படி, பங்குச் சந்தை நடவடிக்கைகள் காலை 9.51 மணி முதல் நிறுத்தப்பட்டன. முற்பகல் 10.21 மணிக்கே வர்த்தக நடவடிக்கை ஆரம்பமானது.
எஸ் அன்ட் பி எஸ். எல். 20 குறியீடு 240.45 புள்ளிகள் 5.3 சதவீதம் சரிந்து 4,292.90 புள்ளிகளாகவும் அனைத்து பங்கு விலை சுட்டிகள் ஆரம்ப வர்த்தகத்தில் 4.16 சதவீதம் - 639.01 புள்ளிகள் சரிந்து 14,734.34 புள்ளிகளாகவும் காணப்பட்டன.
பங்குகள் முந்தைய நாட்களுடன் ஒப்பிடுகையில் 5 சதவீதத்துக்கும் குறைவாக சரிவை சந்திக்கும்போது பங்குச் சந்தை வர்த்தகம் இடைநிறுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வர்த்தக போர் காரணமாக ஆசிய சந்தைகள் சரிவை சந்தித்துள்ளன என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
கொழும்பு பங்கு சந்தையில் திடீர் சரிவு. கொழும்பு பங்கு சந்தை 5 சத வீதத்துக்கும் மேலாக நேற்றைய தினம் சரிவைச் சந்தித்துள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.இதனால், வழக்கமான வர்த்தக நடவடிக்கைகள் சுமார் 30 நிமிடங்கள் நிறுத்தப்பட்டன.இதன்படி, பங்குச் சந்தை நடவடிக்கைகள் காலை 9.51 மணி முதல் நிறுத்தப்பட்டன. முற்பகல் 10.21 மணிக்கே வர்த்தக நடவடிக்கை ஆரம்பமானது.எஸ் அன்ட் பி எஸ். எல். 20 குறியீடு 240.45 புள்ளிகள் 5.3 சதவீதம் சரிந்து 4,292.90 புள்ளிகளாகவும் அனைத்து பங்கு விலை சுட்டிகள் ஆரம்ப வர்த்தகத்தில் 4.16 சதவீதம் - 639.01 புள்ளிகள் சரிந்து 14,734.34 புள்ளிகளாகவும் காணப்பட்டன.பங்குகள் முந்தைய நாட்களுடன் ஒப்பிடுகையில் 5 சதவீதத்துக்கும் குறைவாக சரிவை சந்திக்கும்போது பங்குச் சந்தை வர்த்தகம் இடைநிறுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வர்த்தக போர் காரணமாக ஆசிய சந்தைகள் சரிவை சந்தித்துள்ளன என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.