மியன்மாரில் நில அதிர்வினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் எடுத்து செல்லும் வாகனங்கள் மீது அந்த நாட்டு இராணுவக் குழு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக அவ்வாறான தாக்குதல்களை நிறுத்துவதற்கு இராணுவ குழுவுக்கும் கிளர்ச்சி குழுவுக்கும் இடையே இணக்கப்பாடு எட்டப்பட்டது.
எவ்வாறாயினும் அங்கு 14 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தங்களின் மீது காரணமின்றி தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் அதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே தாக்குதல் நடத்தியதாக மியன்மார் இராணுவ பேச்சாளர் தெரிவித்தார்.
மியன்மாரில் ஏற்பட்ட நில அதிர்வினால் 3,564 பேர் உயிரிழந்ததுடன் 5,000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
மியன்மார் நிவாரண வாகனங்கள் மீது இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு மியன்மாரில் நில அதிர்வினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் எடுத்து செல்லும் வாகனங்கள் மீது அந்த நாட்டு இராணுவக் குழு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக அவ்வாறான தாக்குதல்களை நிறுத்துவதற்கு இராணுவ குழுவுக்கும் கிளர்ச்சி குழுவுக்கும் இடையே இணக்கப்பாடு எட்டப்பட்டது. எவ்வாறாயினும் அங்கு 14 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. தங்களின் மீது காரணமின்றி தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் அதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே தாக்குதல் நடத்தியதாக மியன்மார் இராணுவ பேச்சாளர் தெரிவித்தார். மியன்மாரில் ஏற்பட்ட நில அதிர்வினால் 3,564 பேர் உயிரிழந்ததுடன் 5,000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.