• Apr 09 2025

அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு தொடர்பில் ஜூலி சங்குடன் அமைச்சர் விஜித கலந்துரையாடல்

Chithra / Apr 8th 2025, 8:31 am
image



அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ஆகியோருக்கிடையில் கலந்துரையாடல் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

கலந்துரையாடல் குறித்து அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,

அமெரிக்காவுடன் இலங்கையின் வர்த்தக உறவை சமநிலைப்படுத்துவது தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துடன் பயனுள்ள கலந்துரையாடல் நடைபெற்றது.

அமெரிக்க ஏற்றுமதிகளுக்கு ஈடான அணுகுமுறை வழங்கும் முக்கியத்துவத்தை நான் இதன்போது வலியுறுத்தினேன். 

நியாயமான, சமநிலைபடுத்தப்பட்ட வர்த்தக உறவு பொருளாதார வளர்ச்சியை ஆதரிப்பதுடன் வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது. மேலும் இரு நாடுகளிலும் தொழில்துறைகளை வலுப்படுத்துகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.


அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு தொடர்பில் ஜூலி சங்குடன் அமைச்சர் விஜித கலந்துரையாடல் அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ஆகியோருக்கிடையில் கலந்துரையாடல் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.கலந்துரையாடல் குறித்து அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,அமெரிக்காவுடன் இலங்கையின் வர்த்தக உறவை சமநிலைப்படுத்துவது தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துடன் பயனுள்ள கலந்துரையாடல் நடைபெற்றது.அமெரிக்க ஏற்றுமதிகளுக்கு ஈடான அணுகுமுறை வழங்கும் முக்கியத்துவத்தை நான் இதன்போது வலியுறுத்தினேன். நியாயமான, சமநிலைபடுத்தப்பட்ட வர்த்தக உறவு பொருளாதார வளர்ச்சியை ஆதரிப்பதுடன் வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது. மேலும் இரு நாடுகளிலும் தொழில்துறைகளை வலுப்படுத்துகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement