மியான்மாரில் இன்று அதிகாலை 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் 35 கிமீ (21.75 மைல்) ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே ஹாங் சன் மாகாணத்திலிருந்து வடமேற்கே சுமார் 271 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்ததாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தாய்லாந்தின் சியாங் மாய் மற்றும் சியாங் ராய் ஆகிய இடங்களில் வசிப்பவர்கள் இந்த நிலநடுக்கத்தை உணர்ந்ததாக கூறப்படுகிறது.
ஒரு அறிக்கையின்படி, மார்ச் 28 ஆம் திகதி ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்திற்குப் பிறகு நேற்று வரை மியான்மார் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மொத்தம் 468 பின்அதிர்வுகள் பதிவாகியுள்ளன.
இதேவேளை தஜிகிஸ்தானில் 6.1 ரிக்டர் அளவில் வலுவான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தஜிகிஸ்தான் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (13) காலை 9:54 மணிக்கு 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மியான்மார் மற்றும் தஜிகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் மியான்மாரில் இன்று அதிகாலை 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த நிலநடுக்கம் 35 கிமீ (21.75 மைல்) ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மே ஹாங் சன் மாகாணத்திலிருந்து வடமேற்கே சுமார் 271 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்ததாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தாய்லாந்தின் சியாங் மாய் மற்றும் சியாங் ராய் ஆகிய இடங்களில் வசிப்பவர்கள் இந்த நிலநடுக்கத்தை உணர்ந்ததாக கூறப்படுகிறது.ஒரு அறிக்கையின்படி, மார்ச் 28 ஆம் திகதி ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்திற்குப் பிறகு நேற்று வரை மியான்மார் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மொத்தம் 468 பின்அதிர்வுகள் பதிவாகியுள்ளன.இதேவேளை தஜிகிஸ்தானில் 6.1 ரிக்டர் அளவில் வலுவான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.தஜிகிஸ்தான் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (13) காலை 9:54 மணிக்கு 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது