• Nov 13 2025

பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு; கடலுக்குள் இறங்க வேண்டாம்! மக்களுக்கு அவசர எச்சரிக்கை

Chithra / Nov 12th 2025, 7:07 pm
image

யாழ்ப்பாணம் - வடமராட்சி, கிழக்கு  தாளையடி கடற்பகுதிக்கு வரும் சுற்றுலாவாசிகள் கடலுக்குள் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், வருபவர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு வடமராட்சி கிழக்கு பிரதேச மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். 

வடமராட்சி கிழக்கு தாளையடி கடற்கரை பகுதிக்கு அதிகளவான சுற்றுலாவாசிகள் நாளாந்தம் வருகை தந்து பொழுதை கழிப்பதுடன், அதில் சிலர் கடல் விளையாட்டுக்களிலும் ஈடுபடுகின்றார்கள்.

சிலர் புகைப்படங்கள் எடுப்பது, கடலில் குளிப்பது, நீச்சல் அடிப்பது போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

ஆனால் தற்போது, வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில் அதிகளவான காற்று மற்றும் கடல் கொந்தளிப்பான நிலையில் காணப்படுகிறது.

ஆகவே தாளையடி கடற்கரைக்கு வரும் சுற்றுலாவாசிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு யாரும் கடற்கரைக்குள் இறங்க வேண்டாம் எனவும் கடலுக்கு மிக அண்மித்த பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் அப்பகுதி மீனவர்களால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.


பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு; கடலுக்குள் இறங்க வேண்டாம் மக்களுக்கு அவசர எச்சரிக்கை யாழ்ப்பாணம் - வடமராட்சி, கிழக்கு  தாளையடி கடற்பகுதிக்கு வரும் சுற்றுலாவாசிகள் கடலுக்குள் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், வருபவர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு வடமராட்சி கிழக்கு பிரதேச மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். வடமராட்சி கிழக்கு தாளையடி கடற்கரை பகுதிக்கு அதிகளவான சுற்றுலாவாசிகள் நாளாந்தம் வருகை தந்து பொழுதை கழிப்பதுடன், அதில் சிலர் கடல் விளையாட்டுக்களிலும் ஈடுபடுகின்றார்கள்.சிலர் புகைப்படங்கள் எடுப்பது, கடலில் குளிப்பது, நீச்சல் அடிப்பது போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் தற்போது, வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில் அதிகளவான காற்று மற்றும் கடல் கொந்தளிப்பான நிலையில் காணப்படுகிறது.ஆகவே தாளையடி கடற்கரைக்கு வரும் சுற்றுலாவாசிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு யாரும் கடற்கரைக்குள் இறங்க வேண்டாம் எனவும் கடலுக்கு மிக அண்மித்த பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் அப்பகுதி மீனவர்களால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement