• Dec 17 2025

இலங்கையில் பர்தாவுடன் சுற்றித்திரிந்த மாணவன் கைது; பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலம்

Chithra / Dec 11th 2025, 7:46 pm
image


பர்தா உடை அணிந்து சந்தேகத்திற்கிடமான முறையில் வீதியில் சுற்றித்திரிந்த பாடசாலை மாணவன் ஒருவன் பண்டாரவளை பொலிஸாரால் நேற்றுமுன்தினம் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


பதுளை - பண்டாரவளை நகரத்தில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றுக்கு அருகிலேயே குறித்த மாணவன் பர்தா உடை அணிந்து சந்தேகத்திற்கிடமான முறையில்  சுற்றித்திரிந்துள்ளார். 


பண்டாரவளை பகுதியைச் சேர்ந்த 15 வயதான பாடசாலை மாணவன் ஒருவனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். 


கைதுசெய்யப்பட்ட பாடசாலை மாணவனின் பெற்றோர் வெளிநாட்டில் உள்ளதால், 

மாணவன் தனது சகோதரி மற்றும் பாட்டியுடன் வசித்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.


இந்நிலையில், சகோதரியும் பாட்டியும் வீட்டில் இல்லாத போது சகோதரியின் பர்தா உடையை அணிந்து வீதியில் சுற்றித்திரந்ததாக மாணவன் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.


தனக்கு பர்தா அணிய வேண்டும் என்ற ஆசை இருப்பதாகவும், தனது சகோதரி மேலதிக வகுப்புகளுக்கு சென்ற போது, ​​அவரது உடைகள், செருப்புகள் மற்றும் அழகு சாதனப் பொருட்களை மறைவான இடமொன்றில் அணிந்து கொண்டதுடன், நகரம் முழுவதும் சுற்றித் திரிந்ததாகவும் அந்த மாணவர் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.


இது தொடர்பில் பண்டாரவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இலங்கையில் பர்தாவுடன் சுற்றித்திரிந்த மாணவன் கைது; பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலம் பர்தா உடை அணிந்து சந்தேகத்திற்கிடமான முறையில் வீதியில் சுற்றித்திரிந்த பாடசாலை மாணவன் ஒருவன் பண்டாரவளை பொலிஸாரால் நேற்றுமுன்தினம் கைதுசெய்யப்பட்டுள்ளார்.பதுளை - பண்டாரவளை நகரத்தில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றுக்கு அருகிலேயே குறித்த மாணவன் பர்தா உடை அணிந்து சந்தேகத்திற்கிடமான முறையில்  சுற்றித்திரிந்துள்ளார். பண்டாரவளை பகுதியைச் சேர்ந்த 15 வயதான பாடசாலை மாணவன் ஒருவனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட பாடசாலை மாணவனின் பெற்றோர் வெளிநாட்டில் உள்ளதால், மாணவன் தனது சகோதரி மற்றும் பாட்டியுடன் வசித்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.இந்நிலையில், சகோதரியும் பாட்டியும் வீட்டில் இல்லாத போது சகோதரியின் பர்தா உடையை அணிந்து வீதியில் சுற்றித்திரந்ததாக மாணவன் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.தனக்கு பர்தா அணிய வேண்டும் என்ற ஆசை இருப்பதாகவும், தனது சகோதரி மேலதிக வகுப்புகளுக்கு சென்ற போது, ​​அவரது உடைகள், செருப்புகள் மற்றும் அழகு சாதனப் பொருட்களை மறைவான இடமொன்றில் அணிந்து கொண்டதுடன், நகரம் முழுவதும் சுற்றித் திரிந்ததாகவும் அந்த மாணவர் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பில் பண்டாரவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement