• Nov 25 2024

புற்றுநோயுடன் போராடிய மாணவி மரணம்; கனடாவில் இருந்து இலங்கை திரும்பிய நிலையில் சோகம்

Chithra / Jul 26th 2024, 7:34 am
image


கனடாவின் கான்கார்டியா பல்கலைக்கழகத்தின் கணிதப் பிரிவில் தத்துவவியல் முதுகலைப் பயின்று வந்த இலங்கை மாணவி கடுமையான புற்றுநோயுடன் போராடிய நிலையில் உயிரிழந்துள்ளார்.

குருநாகல் தொரட்டியாவ, மல்லவபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய டபிள்யூ.எம். மாஷா விஜேசிங்க என்ற திருமணமான பட்டதாரி மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கனடாவின் கான்கார்டியா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்த அவர், கடுமையான வயிற்று புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந் நிலையில் இந்த மாணவி தனது கணவருடன் இலங்கைக்கு வந்து புற்று நோய்க்கு இலங்கையில் சிகிச்சை பெற்ற நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.

இவர் பேராதனை பல்கலைகழகத்தின் பட்டதாரி மாணவியும் அதே சமயம் பேராதனை பல்கலைகழகத்தில் விரிவுரையாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.

மேலதிக கல்விக்காக கனடா சென்றதாக உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

புற்றுநோயுடன் போராடிய மாணவி மரணம்; கனடாவில் இருந்து இலங்கை திரும்பிய நிலையில் சோகம் கனடாவின் கான்கார்டியா பல்கலைக்கழகத்தின் கணிதப் பிரிவில் தத்துவவியல் முதுகலைப் பயின்று வந்த இலங்கை மாணவி கடுமையான புற்றுநோயுடன் போராடிய நிலையில் உயிரிழந்துள்ளார்.குருநாகல் தொரட்டியாவ, மல்லவபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய டபிள்யூ.எம். மாஷா விஜேசிங்க என்ற திருமணமான பட்டதாரி மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.கனடாவின் கான்கார்டியா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்த அவர், கடுமையான வயிற்று புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளார்.இந் நிலையில் இந்த மாணவி தனது கணவருடன் இலங்கைக்கு வந்து புற்று நோய்க்கு இலங்கையில் சிகிச்சை பெற்ற நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.இவர் பேராதனை பல்கலைகழகத்தின் பட்டதாரி மாணவியும் அதே சமயம் பேராதனை பல்கலைகழகத்தில் விரிவுரையாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.மேலதிக கல்விக்காக கனடா சென்றதாக உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement