• Dec 01 2024

பாடசாலை செல்லும் வீதியை புனரமைத்து தருமாறு கோரி வடக்கு ஆளுநர் அலுவலகம் முன்பாக மாணவர்கள் போராட்டம்...!

Sharmi / Jun 26th 2024, 1:45 pm
image

பாடசாலைகளுக்கு செல்லும் பிரதான வீதியை புனரமைத்துத் தருமாறு கோரி யாழிலுள்ள வடமாகாண ஆளுநர் செயலகம் முன்பாக தென்மராட்சி பிரதேச பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த போராட்டம் இன்று(26) காலை முதல் இடம்பெற்று வருகின்றது.

குறித்த போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் தமது பாடசாலைகளுக்கு செல்லும் வீதி 50 வருடமாக புனரமைக்கப்படவில்லை எனவும் இதன் காரணமாக மழை காலங்களில் பாடசாலைக்கு செல்வதில் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவித்தனர்.

வீதி புனரமைப்பு தொடர்பில் ஏற்கனவே வடமாகாண ஆளுநருக்கு தெரியப்படுத்தியிருந்த நிலையில் அவர் அதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து இரண்டு மாதங்கள் கடந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குற்றம் சாட்டினர். 

அதேவேளை, இன்றையதினம்(26) ஆளுநரை நாங்கள் சந்திக்க வந்ததாகவும், அவர் தம்மை சந்திக்காமல் மூன்று மணித்தியாளங்களுக்கு மேலாக பாடசாலை மாணவர்கள் வெயிலில் நிற்பது தெரிந்தும் அவர் குளிரூட்டப்பட்ட அறையில் இருப்பதாக குற்றச்சாட்டினார்.

இந்நிலையில், போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் 'வடக்கு ஆளுநரே வெளியில் வா' ,  'வீதி இல்லாத பாதைக்கு ஏன் வரிப் பணம்' என கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.





பாடசாலை செல்லும் வீதியை புனரமைத்து தருமாறு கோரி வடக்கு ஆளுநர் அலுவலகம் முன்பாக மாணவர்கள் போராட்டம். பாடசாலைகளுக்கு செல்லும் பிரதான வீதியை புனரமைத்துத் தருமாறு கோரி யாழிலுள்ள வடமாகாண ஆளுநர் செயலகம் முன்பாக தென்மராட்சி பிரதேச பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.குறித்த போராட்டம் இன்று(26) காலை முதல் இடம்பெற்று வருகின்றது.குறித்த போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் தமது பாடசாலைகளுக்கு செல்லும் வீதி 50 வருடமாக புனரமைக்கப்படவில்லை எனவும் இதன் காரணமாக மழை காலங்களில் பாடசாலைக்கு செல்வதில் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவித்தனர்.வீதி புனரமைப்பு தொடர்பில் ஏற்கனவே வடமாகாண ஆளுநருக்கு தெரியப்படுத்தியிருந்த நிலையில் அவர் அதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து இரண்டு மாதங்கள் கடந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குற்றம் சாட்டினர். அதேவேளை, இன்றையதினம்(26) ஆளுநரை நாங்கள் சந்திக்க வந்ததாகவும், அவர் தம்மை சந்திக்காமல் மூன்று மணித்தியாளங்களுக்கு மேலாக பாடசாலை மாணவர்கள் வெயிலில் நிற்பது தெரிந்தும் அவர் குளிரூட்டப்பட்ட அறையில் இருப்பதாக குற்றச்சாட்டினார்.இந்நிலையில், போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் 'வடக்கு ஆளுநரே வெளியில் வா' ,  'வீதி இல்லாத பாதைக்கு ஏன் வரிப் பணம்' என கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement