• Jun 30 2024

காதலிக்காக அடிதடியில் குதித்த மாணவர்கள்; ஒருவர் வைத்தியசாலையில்! ஐவர் கைது

Chithra / Jun 27th 2024, 9:22 am
image

Advertisement

 

காதல் உறவில் ஏற்பட்ட தகராறில் 17 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் கண்டி - திகன பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

கடந்த 25ஆம் திகதி இரவு 7.30 மணியளவில் திகன ரஜவெல்ல பிரதேசத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

சம்பவம் தொடர்பில் பல்லேகல பிரதேசத்தில் வசிக்கும் 05 பாடசாலை மாணவர்களை மெனிக்ஹின்ன பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 5 மாணவர்களும் 16 முதல் 18 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலுக்கு உள்ளான மாணவர் தெல்தெனிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மெனிக்கின்ன பொலிஸ் நிலைய பிரதான பரிசோதகர் எம்.டி.சந்திரபால தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

காதலிக்காக அடிதடியில் குதித்த மாணவர்கள்; ஒருவர் வைத்தியசாலையில் ஐவர் கைது  காதல் உறவில் ஏற்பட்ட தகராறில் 17 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் கண்டி - திகன பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.கடந்த 25ஆம் திகதி இரவு 7.30 மணியளவில் திகன ரஜவெல்ல பிரதேசத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.சம்பவம் தொடர்பில் பல்லேகல பிரதேசத்தில் வசிக்கும் 05 பாடசாலை மாணவர்களை மெனிக்ஹின்ன பொலிஸார் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட 5 மாணவர்களும் 16 முதல் 18 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.தாக்குதலுக்கு உள்ளான மாணவர் தெல்தெனிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் மெனிக்கின்ன பொலிஸ் நிலைய பிரதான பரிசோதகர் எம்.டி.சந்திரபால தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement