• May 18 2024

பாடசாலைக்கு சமூகமளிக்காததால் மதியம் வரை வகுப்புக்கு வெளியில் நிறுத்தப்பட்ட மாணவிகள்..! கிளிநொச்சியில் சம்பவம் samugammedia

Chithra / Jun 28th 2023, 8:07 am
image

Advertisement

கிளிநொச்சி தருமபுரத்தில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி பயிலும் மாணவர்கள் பலர் நேற்று பாடசாலைக்கு சமூகமளிக்காத காரணத்தினால்  (27) அதிபரால் தண்டிக்கப்பட்டுள்ளனார்.

இரண்டு மாணவிகள் மதியம் வரை வகுப்பு அனுமதிக்கப்படவில்லை. இந்த விவகாரம் வலய கல்விப் பணிமனைக்கு சென்ற பின்னர், அதிகாரிகளின் தலையீட்டையடுத்தே மாணவிகள் இருவரும் வகுப்புக்கு அனுமதிக்கப்பட்டனர்.

பிரதேசத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்றினால் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருகோணமலைக்கான ஒருநாள் சுற்றுலா பயணம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

நேற்றுமுன்தினம் பாடசாலைக்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்கள் சமூகமளித்திருக்கவில்லை.

பாடசாலைக்கு சமூகமளிக்காததற்கான காரணமாக, சுகயீனமென குறிப்பிட்டு கடிதமெழுதிக் கொண்டு ஒரு பகுதி மாணவர்கள் நேற்று பாடசாலைக்கு சமூகமளித்திருந்தனர்.

நேற்றுமுன்தினம் பாடசாலைக்கு சமூகமளிக்காத மாணவர்கள் வகுப்புக்கு வெளியில் நிறுத்தப்பட்டு. அதிபரால் அடித்து தண்டிக்கப்பட்டனர். சுமார் 30 இற்கும் அதிகமான மாணவர்கள் இவ்வாறு தண்டிக்கப்பட்டதாக பெற்றோர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தகவல் அறிந்து சில மாணவர்களின் பெற்றோர்கள் பாடசாலைக்கு சென்றிருந்தனர்.

அவர்களிடம், மாணவர்கள் எழுதி வந்த கூயீன விடுப்பு கடிதத்தின் காரணம் தவறென்றும், குறிப்பிட்ட தனியார் கல்வி நிறுவனத்தை நடத்தபவரின் பெயரை குறிப்பிட்டு, அவரால் சுற்றுலா அழைத்து சென்றதால் காய்ச்சல் ஏற்பட்டதாக கடிதம் எழுதி தருமாறு அதிபர் அழுத்தம் கொடுத்ததாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலை சில தனியார் கல்வி நிறுவனத்தை நடத்துபவர் அறிந்து, பாடசாலைக்கு சென்று கலந்துரையாடியுள்ளனர்.

மாணவர்கள் தாக்கப்படுவதாக தகவமறிந்து பாடசாலைக்கு சென்ற பெற்றோர்கள், அதிபர் கேட்டபடி கடிதம் எழுதிக் கொடுக்கவில்லை. இதையடுத்து, தரம் 5 இல் கல்வி பயிலும் 2 மாணவிகள் மதியம் வரை வகுப்பு வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த தகவலை பெற்றோர் தரப்பில் வலயக் கல்வி பணிமனைக்கு அறிவித்ததையடுத்து, வலயக்கல்வி பணிமனையிலிருந்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டதை தொடர்ந்தே,  இரண்டு மாணவிகளையும் வகுப்பு செல்ல அதிபர் அனுமதித்தார் என பெற்றோர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட தனியார் கல்வி நிறுவனருக்கும், பாடசாலை நிர்வாகத்துக்குமுள்ள கசப்பினால் தமது பிள்ளைகள் பாதிக்கப்படுவதாக பெற்றோர் விசனம் வெளியிட்டனர்.


பாடசாலைக்கு சமூகமளிக்காததால் மதியம் வரை வகுப்புக்கு வெளியில் நிறுத்தப்பட்ட மாணவிகள். கிளிநொச்சியில் சம்பவம் samugammedia கிளிநொச்சி தருமபுரத்தில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி பயிலும் மாணவர்கள் பலர் நேற்று பாடசாலைக்கு சமூகமளிக்காத காரணத்தினால்  (27) அதிபரால் தண்டிக்கப்பட்டுள்ளனார்.இரண்டு மாணவிகள் மதியம் வரை வகுப்பு அனுமதிக்கப்படவில்லை. இந்த விவகாரம் வலய கல்விப் பணிமனைக்கு சென்ற பின்னர், அதிகாரிகளின் தலையீட்டையடுத்தே மாணவிகள் இருவரும் வகுப்புக்கு அனுமதிக்கப்பட்டனர்.பிரதேசத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்றினால் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருகோணமலைக்கான ஒருநாள் சுற்றுலா பயணம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.நேற்றுமுன்தினம் பாடசாலைக்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்கள் சமூகமளித்திருக்கவில்லை.பாடசாலைக்கு சமூகமளிக்காததற்கான காரணமாக, சுகயீனமென குறிப்பிட்டு கடிதமெழுதிக் கொண்டு ஒரு பகுதி மாணவர்கள் நேற்று பாடசாலைக்கு சமூகமளித்திருந்தனர்.நேற்றுமுன்தினம் பாடசாலைக்கு சமூகமளிக்காத மாணவர்கள் வகுப்புக்கு வெளியில் நிறுத்தப்பட்டு. அதிபரால் அடித்து தண்டிக்கப்பட்டனர். சுமார் 30 இற்கும் அதிகமான மாணவர்கள் இவ்வாறு தண்டிக்கப்பட்டதாக பெற்றோர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.தகவல் அறிந்து சில மாணவர்களின் பெற்றோர்கள் பாடசாலைக்கு சென்றிருந்தனர்.அவர்களிடம், மாணவர்கள் எழுதி வந்த கூயீன விடுப்பு கடிதத்தின் காரணம் தவறென்றும், குறிப்பிட்ட தனியார் கல்வி நிறுவனத்தை நடத்தபவரின் பெயரை குறிப்பிட்டு, அவரால் சுற்றுலா அழைத்து சென்றதால் காய்ச்சல் ஏற்பட்டதாக கடிதம் எழுதி தருமாறு அதிபர் அழுத்தம் கொடுத்ததாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த தகவலை சில தனியார் கல்வி நிறுவனத்தை நடத்துபவர் அறிந்து, பாடசாலைக்கு சென்று கலந்துரையாடியுள்ளனர்.மாணவர்கள் தாக்கப்படுவதாக தகவமறிந்து பாடசாலைக்கு சென்ற பெற்றோர்கள், அதிபர் கேட்டபடி கடிதம் எழுதிக் கொடுக்கவில்லை. இதையடுத்து, தரம் 5 இல் கல்வி பயிலும் 2 மாணவிகள் மதியம் வரை வகுப்பு வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.இந்த தகவலை பெற்றோர் தரப்பில் வலயக் கல்வி பணிமனைக்கு அறிவித்ததையடுத்து, வலயக்கல்வி பணிமனையிலிருந்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டதை தொடர்ந்தே,  இரண்டு மாணவிகளையும் வகுப்பு செல்ல அதிபர் அனுமதித்தார் என பெற்றோர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பிட்ட தனியார் கல்வி நிறுவனருக்கும், பாடசாலை நிர்வாகத்துக்குமுள்ள கசப்பினால் தமது பிள்ளைகள் பாதிக்கப்படுவதாக பெற்றோர் விசனம் வெளியிட்டனர்.

Advertisement

Advertisement

Advertisement