முல்லைத்தீவு கொக்கிளாய் அ.த.க பாடசாலையில் வெட்டு புள்ளிகளுக்கு மேலாக 162 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்த மாணவியினையும் சாதாரண தரத்தில் சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்களையும் கௌரவிக்கின்ற நிகழ்வானது குமுழமுனையினை பிறப்பிடமாகக் கொண்டு தற்பொழுது கனடா நாட்டிலே வசித்து வருகின்ற கந்தசாமி பத்மநாதனின் நிதியனுசரனையிலும் மற்றும் கொக்கிளாய் கற்கைநெறி உதவிக்குழு அமைப்பினரது அனுசரணையிலும் பாடசாலை முதல்வர் செந்தூரன் ஐயா தலைமையில் நேற்றையதினம் மிக சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் உதவிக்கல்வி பணிப்பாளர் (ஆரம்ப கல்வி) இலக்கிய கலாநிதி தமிழருவி த.சிவகுமாரன் , அப் பாடசாலையின் முன்னைநாள் ஆசிரியர்கள், மதகுருமார்கள், பொலிஸ் அதிகாரிகள் , ஆசிரியர்கள் ,கிராம பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பாடசாலை பழைய மாணவர்கள், பெற்றோர்கள், கிராமத்தவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.
புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் சாதாரணதர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு.samugammedia முல்லைத்தீவு கொக்கிளாய் அ.த.க பாடசாலையில் வெட்டு புள்ளிகளுக்கு மேலாக 162 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்த மாணவியினையும் சாதாரண தரத்தில் சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்களையும் கௌரவிக்கின்ற நிகழ்வானது குமுழமுனையினை பிறப்பிடமாகக் கொண்டு தற்பொழுது கனடா நாட்டிலே வசித்து வருகின்ற கந்தசாமி பத்மநாதனின் நிதியனுசரனையிலும் மற்றும் கொக்கிளாய் கற்கைநெறி உதவிக்குழு அமைப்பினரது அனுசரணையிலும் பாடசாலை முதல்வர் செந்தூரன் ஐயா தலைமையில் நேற்றையதினம் மிக சிறப்பாக இடம்பெற்றது.இந்நிகழ்வில் உதவிக்கல்வி பணிப்பாளர் (ஆரம்ப கல்வி) இலக்கிய கலாநிதி தமிழருவி த.சிவகுமாரன் , அப் பாடசாலையின் முன்னைநாள் ஆசிரியர்கள், மதகுருமார்கள், பொலிஸ் அதிகாரிகள் , ஆசிரியர்கள் ,கிராம பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பாடசாலை பழைய மாணவர்கள், பெற்றோர்கள், கிராமத்தவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.