• Jan 26 2025

புலமைப்பரிசில் பரீட்சையில் அதிக மதிப்பெண் பெற்று சாதித்த மாணவர்கள்

Chithra / Jan 24th 2025, 11:50 am
image

 

2024 புலமைப்பரிசில் பரீட்சையில் 18 மாணவர்கள் அதிகூடிய மதிப்பெண்களை பெற்றுள்ளதாக இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இன்று (24) காலை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

நேற்று வெளியான பெறுபேறுகளில் அதிக புள்ளிகளைப் பெற்ற மாணவர் ஒருவர் 188 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.

அதேநேரம், பல பரீட்சார்த்திகள் 187, 186 மற்றும் பல அதிகபடியான மதிப்பெண்களை பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

இவ்வாறு அதிக மதிப்பெண் பெற்ற 18 மாணவர்களில் 11 பேர் ஆண் பிள்ளைகள் ஆவர்.

2024 ஆண்டுக்கான புலமைப் பரிசில் பரீட்சையில் 319,284 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்த நிலையில் அதில் 51,244 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

அதன்படி, பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் சதவீதம் 16.05 ஆகும்.

மேலும், இந்த ஆண்டு முடிவுகளின்படி, 77.96% மாணவர்கள் 70 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட இது சற்று அதிகமாகும்.

கடந்த ஆண்டு தேர்வெழுதிய மாணவர்களில் 45.06% பேர் 100 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

புலமைப்பரிசில் பரீட்சையில் அதிக மதிப்பெண் பெற்று சாதித்த மாணவர்கள்  2024 புலமைப்பரிசில் பரீட்சையில் 18 மாணவர்கள் அதிகூடிய மதிப்பெண்களை பெற்றுள்ளதாக இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.இன்று (24) காலை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.நேற்று வெளியான பெறுபேறுகளில் அதிக புள்ளிகளைப் பெற்ற மாணவர் ஒருவர் 188 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.அதேநேரம், பல பரீட்சார்த்திகள் 187, 186 மற்றும் பல அதிகபடியான மதிப்பெண்களை பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.இவ்வாறு அதிக மதிப்பெண் பெற்ற 18 மாணவர்களில் 11 பேர் ஆண் பிள்ளைகள் ஆவர்.2024 ஆண்டுக்கான புலமைப் பரிசில் பரீட்சையில் 319,284 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்த நிலையில் அதில் 51,244 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.அதன்படி, பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் சதவீதம் 16.05 ஆகும்.மேலும், இந்த ஆண்டு முடிவுகளின்படி, 77.96% மாணவர்கள் 70 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட இது சற்று அதிகமாகும்.கடந்த ஆண்டு தேர்வெழுதிய மாணவர்களில் 45.06% பேர் 100 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement