• Nov 28 2024

பிளாஸ்டிக் போத்தல்கள் தொடர்பில் ஆய்வில் அதிர்ச்சி தகவல்; சுகாதாரத்துறை மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

Chithra / Oct 16th 2024, 3:57 pm
image

 குடிநீர் அடைக்கப்படும் பிளாஸ்டிக் போத்தல்களை மீண்டும் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு சுகாதாரத்துறை மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

பிளாஸ்டிக் போத்தல்களை மீளப் பயன்படுத்தும் போது, ​​அவற்றின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களிலிருந்து சில இரசாயனங்கள் நீருடன் கலப்பதாக உணவு பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அவற்றில் சில இரசாயனங்கள் புற்றுநோயை உண்டாக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதனால் குடிநீர் நிரம்பிய பிளாஸ்டிக் போத்தல்களை மீளப் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சிலர் நீரை சேமித்து வைப்பதற்காக குறித்த பிளாஸ்டிக் போத்தல்களை மீளப் பயன்படுத்துவதாகவும்,

அவை ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் சுகாதார அமைச்சின் உணவு பாதுகாப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

பிளாஸ்டிக் போத்தல்கள் தொடர்பில் ஆய்வில் அதிர்ச்சி தகவல்; சுகாதாரத்துறை மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை  குடிநீர் அடைக்கப்படும் பிளாஸ்டிக் போத்தல்களை மீண்டும் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு சுகாதாரத்துறை மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.பிளாஸ்டிக் போத்தல்களை மீளப் பயன்படுத்தும் போது, ​​அவற்றின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களிலிருந்து சில இரசாயனங்கள் நீருடன் கலப்பதாக உணவு பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.அவற்றில் சில இரசாயனங்கள் புற்றுநோயை உண்டாக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.இதனால் குடிநீர் நிரம்பிய பிளாஸ்டிக் போத்தல்களை மீளப் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.சிலர் நீரை சேமித்து வைப்பதற்காக குறித்த பிளாஸ்டிக் போத்தல்களை மீளப் பயன்படுத்துவதாகவும்,அவை ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் சுகாதார அமைச்சின் உணவு பாதுகாப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement