• Nov 26 2024

சாய்ந்தமருதில் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கை வெற்றி ...! பொலிஸார் பெருமிதம்...! samugammedia

Sharmi / Feb 5th 2024, 1:00 pm
image

சாய்ந்தமருதில் போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் முறியடிப்பு நடவடிக்கைகள் மிக வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக சாய்ந்தமருது பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.எல் சம்சுதீன் தெரிவித்தார்.

வடக்கு கிழக்கு சமாதான நீதிபதிகள் சபையினால்  நேற்றையதினம்(04) சாய்ந்தமருதில் சுதந்திர தின நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய சாய்ந்தமருது பொலிஸ் பொறுப்பதிகாரி சம்சுதீன்,

இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பால் இலங்கையர்களாக எல்லோரும் செயற்பட்டு பெற்ற சுதந்திரத்தைதான் இன்று கொண்டாடி கொண்டிருக்கிறோம்.

இது சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் அனைவரும் சேர்ந்த பெற்ற சுதந்திரம்.

நாட்டுக்கு கிடைத்த சுதந்திரத்தை எல்லா மக்களும், எல்லா பிரதேசங்களும் அனுபவிக்க வேண்டும். 

நான் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடந்த இரு வருடங்களாக சேவையாற்றி வருகின்றேன். 

இப்பிரதேசத்தில் போதைப் பொருள் வியாபாரம் மற்றும் பாவனை அதிகமாக காணப்பட்டது.  

பாரிய சவால்களுக்கு மத்தியில் நாம் இப்பிரதேசத்தில் போதைப் பொருள் ஒழிப்பு மற்று முறியடிப்பு நடவடிக்கைகளில் சாதித்துள்ளோம். சட்டம் அதன்  கடமையை செய்தது.

பல இடங்களிலும் போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் முறியடிப்புகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் தெரிவித்தார்.



சாய்ந்தமருதில் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கை வெற்றி . பொலிஸார் பெருமிதம். samugammedia சாய்ந்தமருதில் போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் முறியடிப்பு நடவடிக்கைகள் மிக வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக சாய்ந்தமருது பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.எல் சம்சுதீன் தெரிவித்தார்.வடக்கு கிழக்கு சமாதான நீதிபதிகள் சபையினால்  நேற்றையதினம்(04) சாய்ந்தமருதில் சுதந்திர தின நிகழ்வு இடம்பெற்றது.நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய சாய்ந்தமருது பொலிஸ் பொறுப்பதிகாரி சம்சுதீன்,இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பால் இலங்கையர்களாக எல்லோரும் செயற்பட்டு பெற்ற சுதந்திரத்தைதான் இன்று கொண்டாடி கொண்டிருக்கிறோம். இது சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் அனைவரும் சேர்ந்த பெற்ற சுதந்திரம்.நாட்டுக்கு கிடைத்த சுதந்திரத்தை எல்லா மக்களும், எல்லா பிரதேசங்களும் அனுபவிக்க வேண்டும். நான் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடந்த இரு வருடங்களாக சேவையாற்றி வருகின்றேன். இப்பிரதேசத்தில் போதைப் பொருள் வியாபாரம் மற்றும் பாவனை அதிகமாக காணப்பட்டது.  பாரிய சவால்களுக்கு மத்தியில் நாம் இப்பிரதேசத்தில் போதைப் பொருள் ஒழிப்பு மற்று முறியடிப்பு நடவடிக்கைகளில் சாதித்துள்ளோம். சட்டம் அதன்  கடமையை செய்தது.பல இடங்களிலும் போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் முறியடிப்புகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement