• May 17 2024

ஒட்டிப்பிறந்த சிசுக்கள் வெற்றிகரமாக பிரித்தெடுப்பு..!சவுதி வைத்தியர்கள் சாதனை..!samugammedia

Tamil nila / Jul 14th 2023, 5:43 pm
image

Advertisement

ஒட்டிப்பிறந்த சிசுக்களை இலவசமாக சத்திரசிகிச்சை செய்து பிரித்தெடுத்து வைத்தியர்கள் சாதனை படைத்துள்ளனர். 

இச்சம்பவம் சவூதி அரேபியாவில் இடம்பெற்றுள்ளது. 

இவ்வாறாக, ஒட்டிப்பிறந்த குழந்தைகளை இலவசமாகப் பிரித்தெடுத்து வாழ்வளிக்கும் ஒரே மனிதநேய நாடாக இந்த நாடு  திகழ்கின்றது.

அந்த வகையில், சவூதி அரேபிய ரியாத் நகரில்,  சிரிய நாட்டைச் சேர்ந்த பஸ்ஸாம் மற்றும் இஹ்ஸான் என்ற  எனும் ஒட்டிப்பிறந்த இரு குழந்தைகளையும் பிரித்தெடுக்கும்  சத்திரசிகிச்சை ஏழரை மணி நேரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இந்த சத்திரசிகிச்சை  வழமை போன்று பேராசிரியர் அப்துல்லாஹ் அர் ரபீஆ தலைமையில் இடம் பெற்றுள்ளதுடன் அதனை அருகிலுள்ள தியேட்டரில் இருந்து அந்த குழந்தைகளின் பெற்றோர்களும் நேரடியாக வீடியோ மூலம் பார்த்துள்ளனர். 



இந்நிலையில்,  சத்திரசிகிச்சையின் பின்னர் தற்பொழுது இரு குழந்தைகளும் நலமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்த வகையில்,இந்த சேவையினை  சுமார் 33  வருடமாக சவூதி அரேபியா மேற்கொண்டு வருவதுடன், இதுவரை 23 நாடுகளைச் சேர்ந்த 131 ஒட்டிப்பிறந்த குழந்தைகளை அது இலவசமாகப் பராமரித்தும் வருகின்றது. 

அதில், 57 ஆவதாக வெற்றிகரமாக பிரிக்கப்பட்ட ஜோடிகளாக பஸ்ஸாம் மற்றும் இஹ்ஸான்  எனும் இந்த குழந்தைகள் பதிவாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒட்டிப்பிறந்த சிசுக்கள் வெற்றிகரமாக பிரித்தெடுப்பு.சவுதி வைத்தியர்கள் சாதனை.samugammedia ஒட்டிப்பிறந்த சிசுக்களை இலவசமாக சத்திரசிகிச்சை செய்து பிரித்தெடுத்து வைத்தியர்கள் சாதனை படைத்துள்ளனர். இச்சம்பவம் சவூதி அரேபியாவில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறாக, ஒட்டிப்பிறந்த குழந்தைகளை இலவசமாகப் பிரித்தெடுத்து வாழ்வளிக்கும் ஒரே மனிதநேய நாடாக இந்த நாடு  திகழ்கின்றது.அந்த வகையில், சவூதி அரேபிய ரியாத் நகரில்,  சிரிய நாட்டைச் சேர்ந்த பஸ்ஸாம் மற்றும் இஹ்ஸான் என்ற  எனும் ஒட்டிப்பிறந்த இரு குழந்தைகளையும் பிரித்தெடுக்கும்  சத்திரசிகிச்சை ஏழரை மணி நேரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சத்திரசிகிச்சை  வழமை போன்று பேராசிரியர் அப்துல்லாஹ் அர் ரபீஆ தலைமையில் இடம் பெற்றுள்ளதுடன் அதனை அருகிலுள்ள தியேட்டரில் இருந்து அந்த குழந்தைகளின் பெற்றோர்களும் நேரடியாக வீடியோ மூலம் பார்த்துள்ளனர். இந்நிலையில்,  சத்திரசிகிச்சையின் பின்னர் தற்பொழுது இரு குழந்தைகளும் நலமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில்,இந்த சேவையினை  சுமார் 33  வருடமாக சவூதி அரேபியா மேற்கொண்டு வருவதுடன், இதுவரை 23 நாடுகளைச் சேர்ந்த 131 ஒட்டிப்பிறந்த குழந்தைகளை அது இலவசமாகப் பராமரித்தும் வருகின்றது. அதில், 57 ஆவதாக வெற்றிகரமாக பிரிக்கப்பட்ட ஜோடிகளாக பஸ்ஸாம் மற்றும் இஹ்ஸான்  எனும் இந்த குழந்தைகள் பதிவாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement