• May 29 2025

அம்பாறையில் விசேட அதிரடிப் படையினரின் திடீர் நடவடிக்கை: இளைஞன் கைது..!

Sharmi / May 26th 2025, 2:02 pm
image

அம்பாறை பெரியநீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் நடமாடிய இளைஞர் ஒருவர் கல்முனை விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்முனை விசேட அதிரடிப்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 26 வயது மதிக்கத்தக்க 2 பிள்ளைகளின் தந்தையான மருதமுனை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஐஸ் போதைப் பொருளுடன் கல்முனை விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 710 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டதுடன் சந்தேக நபர் உட்பட சான்றுப்பொருட்கள் யாவும் சட்ட நடவடிக்கைக்காக பெரியநீலாவனை மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த கைது நடவடிக்கையானது கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்கவின் வழிகாட்டுதலில் முன்னெடுக்கப்பட்டது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.


அம்பாறையில் விசேட அதிரடிப் படையினரின் திடீர் நடவடிக்கை: இளைஞன் கைது. அம்பாறை பெரியநீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் நடமாடிய இளைஞர் ஒருவர் கல்முனை விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கல்முனை விசேட அதிரடிப்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 26 வயது மதிக்கத்தக்க 2 பிள்ளைகளின் தந்தையான மருதமுனை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஐஸ் போதைப் பொருளுடன் கல்முனை விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபர் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 710 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டதுடன் சந்தேக நபர் உட்பட சான்றுப்பொருட்கள் யாவும் சட்ட நடவடிக்கைக்காக பெரியநீலாவனை மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த கைது நடவடிக்கையானது கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்கவின் வழிகாட்டுதலில் முன்னெடுக்கப்பட்டது.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement