• Nov 24 2024

யாழில் தமிழாராய்ச்சி படுகொலை நினைவேந்தல் தூபி வளாகத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்..!

Sharmi / Aug 23rd 2024, 3:44 pm
image

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக அமைந்துள்ள தமிழாராய்ச்சி  படுகொலை நினைவேந்தல் தூபி வளாகமானது பராமரிப்பு இன்றி புற்கள் வளர்ந்த நிலையில் காணப்பட்டமை தொடர்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் தன்னார்வ ரீதியாக முன்வந்த சிலர் அந்த பகுதியில் வளர்ந்திருந்த புற்களை வெட்டி சுத்தம் செய்தனர்.

இந்நிலையில் குறித்த பகுதியை சுத்தம் செய்தவர்களை மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

1974ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதிவரை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் ஏற்பட்ட கலவரத்தில் ஒன்பது பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

உலகளாவிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடாத்தவிடாமல் அப்போதைய சிறிமாவோ பண்டார நாயக்க தலைமையிலான அரசு, பொலிஸாரை அனுப்பி கலவரத்தை ஏற்படுத்தியது.

இதன்போது ஒன்பது தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தமிழர்கள் மனத்தில் நீங்காத வடுக்களாக இந்தப்படுகொலைச் சம்பவம் பதியப்பட்டது. அதன் வெளிப்பாடாகவே இந்த நினைவேந்தல் தூபியானது அமைக்கப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

யாழில் தமிழாராய்ச்சி படுகொலை நினைவேந்தல் தூபி வளாகத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம். யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக அமைந்துள்ள தமிழாராய்ச்சி  படுகொலை நினைவேந்தல் தூபி வளாகமானது பராமரிப்பு இன்றி புற்கள் வளர்ந்த நிலையில் காணப்பட்டமை தொடர்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.இந்நிலையில் தன்னார்வ ரீதியாக முன்வந்த சிலர் அந்த பகுதியில் வளர்ந்திருந்த புற்களை வெட்டி சுத்தம் செய்தனர்.இந்நிலையில் குறித்த பகுதியை சுத்தம் செய்தவர்களை மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.1974ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதிவரை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் ஏற்பட்ட கலவரத்தில் ஒன்பது பேர் படுகொலை செய்யப்பட்டனர்.உலகளாவிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடாத்தவிடாமல் அப்போதைய சிறிமாவோ பண்டார நாயக்க தலைமையிலான அரசு, பொலிஸாரை அனுப்பி கலவரத்தை ஏற்படுத்தியது.இதன்போது ஒன்பது தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தமிழர்கள் மனத்தில் நீங்காத வடுக்களாக இந்தப்படுகொலைச் சம்பவம் பதியப்பட்டது. அதன் வெளிப்பாடாகவே இந்த நினைவேந்தல் தூபியானது அமைக்கப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement