• Nov 15 2024

இலங்கையின் வானிலையில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்; கடலுக்கு செல்ல வேண்டாமென மீண்டும் எச்சரிக்கை

Chithra / Sep 9th 2024, 7:23 am
image

 

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை எதிர்வரும் சில தினங்களில் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

இதன்படி மேல், சபரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இன்று 50 மில்லிமீற்றர் வரை பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் அறிவித்துள்ளது. 

அத்துடன் ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை பெய்யக்கூடும். 

இதனிடையே, மறு அறிவித்தல் வரை வங்கக்கடலின் ஆழ்கடல் பகுதிகளுக்குச் செல்வதை தவிர்க்குமாறு கடற்தொழிலார்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. 

மத்திய வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தம் தாழ்வு மண்டலமாக உருவாவதற்கான சாத்தியம் காணப்படுவதன் காரணமாக இவ்வாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்துவரும் 2 நாட்களில் வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ஒடிசா கடற்கரையை அண்மிக்கும் என குறிப்பிட்டுள்ளது. 

இதன்படி, குறித்த கடற்பரப்பில் மணித்தியாலத்திற்கு 80 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும், கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.


இலங்கையின் வானிலையில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்; கடலுக்கு செல்ல வேண்டாமென மீண்டும் எச்சரிக்கை  நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை எதிர்வரும் சில தினங்களில் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி மேல், சபரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இன்று 50 மில்லிமீற்றர் வரை பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன் ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை பெய்யக்கூடும். இதனிடையே, மறு அறிவித்தல் வரை வங்கக்கடலின் ஆழ்கடல் பகுதிகளுக்குச் செல்வதை தவிர்க்குமாறு கடற்தொழிலார்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. மத்திய வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தம் தாழ்வு மண்டலமாக உருவாவதற்கான சாத்தியம் காணப்படுவதன் காரணமாக இவ்வாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்துவரும் 2 நாட்களில் வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ஒடிசா கடற்கரையை அண்மிக்கும் என குறிப்பிட்டுள்ளது. இதன்படி, குறித்த கடற்பரப்பில் மணித்தியாலத்திற்கு 80 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும், கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement