யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் அண்மைக்காலமாக போதை பொருள் சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், கட்டைக்காடு காட்டுப்பகுதிக்குள் போதைப்பொருள் புதைத்து வைத்திருப்பதாக கடற்படையினருக்கு புலனாய்வு தகவல் கிடைத்துள்ளது.
இதன்பிரகாரம் நேற்று மாலை 05.00 மணியளவில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் குறித்த இடத்தில் திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.
இதன்போது, காட்டுப் பகுதிக்குள் பெருமளவான கஞ்சா பொதிகளை புதைத்துவைத்துள்ள கடத்தல்காரர்கள் பாதுகாப்பு படையினரின் சோதனைகளால் அதை விற்பனை செய்ய முடியாது திண்டாடி வந்த நிலையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இரண்டு மணி நேரமாக 15 இற்கும் மேற்பட்ட கடற்படையினர் புலனாய்வாளர்களுடன் தேடுதல் நடத்திவந்த நிலையில் 55Kg பெறுமதியான கேரள கஞ்சா மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழில் கடற்படையினரின் திடீர் சுற்றிவளைப்பு. காட்டுப் பகுதியில் இருந்து முக்கிய பொருட்கள் மீட்பு.samugammedia யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் அண்மைக்காலமாக போதை பொருள் சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.இந்நிலையில், கட்டைக்காடு காட்டுப்பகுதிக்குள் போதைப்பொருள் புதைத்து வைத்திருப்பதாக கடற்படையினருக்கு புலனாய்வு தகவல் கிடைத்துள்ளது.இதன்பிரகாரம் நேற்று மாலை 05.00 மணியளவில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் குறித்த இடத்தில் திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.இதன்போது, காட்டுப் பகுதிக்குள் பெருமளவான கஞ்சா பொதிகளை புதைத்துவைத்துள்ள கடத்தல்காரர்கள் பாதுகாப்பு படையினரின் சோதனைகளால் அதை விற்பனை செய்ய முடியாது திண்டாடி வந்த நிலையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.இரண்டு மணி நேரமாக 15 இற்கும் மேற்பட்ட கடற்படையினர் புலனாய்வாளர்களுடன் தேடுதல் நடத்திவந்த நிலையில் 55Kg பெறுமதியான கேரள கஞ்சா மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.