• Nov 26 2024

திடீரென அதிகரித்த தேங்காய் விலை - உணவுகளின் விலையில் கடுமையான பாதிப்பு..!

Chithra / Mar 4th 2024, 12:51 pm
image


தேங்காய் விலை உயர்வானது, எதிர்காலத்தில் உணவுப்பொதி மற்றும் கறி உணவுகளின் விலையில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்  என அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

60 முதல் 80 ரூபாவாக இருந்த தேங்காய் ஒன்றின் விலை தற்போது 120 முதல் 150 ரூபா வரை அதிகரித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.

கறி தயாரிப்பில் தேங்காய் பாலை பயன்படுத்துவது அத்தியாவசியமானது எனவும், 

தேங்காயின் விலை உயர்வால் நாடளாவிய ரீதியில் உள்ள பெரும்பாலான உணவக உரிமையாளர்கள் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.

அரிசி, கோழிக்கறி, முட்டை, எரிவாயு உள்ளிட்ட அனைத்தும் கணிசமாக உயர்ந்துள்ள நிலையில் தேங்காய்களின் எதிர்பாராத விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

இதுவொரு கடினமான சூழல் என்பதுடன், எதிர்வரும் காலங்களில் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெயின் விலை மேலும் அதிகரிக்கலாம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

திடீரென அதிகரித்த தேங்காய் விலை - உணவுகளின் விலையில் கடுமையான பாதிப்பு. தேங்காய் விலை உயர்வானது, எதிர்காலத்தில் உணவுப்பொதி மற்றும் கறி உணவுகளின் விலையில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்  என அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.60 முதல் 80 ரூபாவாக இருந்த தேங்காய் ஒன்றின் விலை தற்போது 120 முதல் 150 ரூபா வரை அதிகரித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.கறி தயாரிப்பில் தேங்காய் பாலை பயன்படுத்துவது அத்தியாவசியமானது எனவும், தேங்காயின் விலை உயர்வால் நாடளாவிய ரீதியில் உள்ள பெரும்பாலான உணவக உரிமையாளர்கள் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.அரிசி, கோழிக்கறி, முட்டை, எரிவாயு உள்ளிட்ட அனைத்தும் கணிசமாக உயர்ந்துள்ள நிலையில் தேங்காய்களின் எதிர்பாராத விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.இதுவொரு கடினமான சூழல் என்பதுடன், எதிர்வரும் காலங்களில் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெயின் விலை மேலும் அதிகரிக்கலாம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement