• Sep 14 2024

மட்டக்களப்பில் திடீர் சுற்றிவளைப்பு; நான்கு கடைகளுக்கு சீல்; 54 பேர் மீது வழக்கு

Chithra / Aug 29th 2024, 2:08 pm
image

Advertisement


மட்டக்களப்பு காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட ஹோட்டல்கள், உணவகங்கள், சிற்றுண்டி சாலைகள் மீது  சுகாதார அதிகாரிகள் மேற்கொண்ட பாரிய திடீர் சோதனையின் போது நான்கு உணவகங்களுக்கு சீல் வைக்கப்பட்டதுடன், 54 பேர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இச் சுற்றிவளைப்பு நேற்று புதன்கிழமை (28)  மாலை இடம்பெற்றது.

மனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களை விற்பனை செய்த, பழுதடைந்த, காலாவதியான, பிளாஸ்டிக் பாத்திரங்களில் உணவுப் பொருட்களை விற்பனை செய்த, வர்த்தக நிலையங்களில் வர்த்தகர்கள் 9 பேர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், நான்கு உணவகங்கள் சீல் வைத்து மூடப்பட்டுள்ளன.

இதே நேரம் மருத்துவ சான்றிதழ் இல்லாமல் உணவகங்கள் சிற்றுண்டி சாலைகளில் பணியாளர்களாக பணிபுரிந்த 45 பேர் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மீதும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்.

சுமார் 6 மணித்தியாலங்கள் வரை இடம்பெற்ற சோதனைகளின் பின் போது பெருமளவிலான பழுதடைந்த மனித பாவனைக்கு உதவாத காலாவதியான உணவுப் பொருட்கள் சுகாதார அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.


மட்டக்களப்பில் திடீர் சுற்றிவளைப்பு; நான்கு கடைகளுக்கு சீல்; 54 பேர் மீது வழக்கு மட்டக்களப்பு காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட ஹோட்டல்கள், உணவகங்கள், சிற்றுண்டி சாலைகள் மீது  சுகாதார அதிகாரிகள் மேற்கொண்ட பாரிய திடீர் சோதனையின் போது நான்கு உணவகங்களுக்கு சீல் வைக்கப்பட்டதுடன், 54 பேர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.இச் சுற்றிவளைப்பு நேற்று புதன்கிழமை (28)  மாலை இடம்பெற்றது.மனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களை விற்பனை செய்த, பழுதடைந்த, காலாவதியான, பிளாஸ்டிக் பாத்திரங்களில் உணவுப் பொருட்களை விற்பனை செய்த, வர்த்தக நிலையங்களில் வர்த்தகர்கள் 9 பேர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், நான்கு உணவகங்கள் சீல் வைத்து மூடப்பட்டுள்ளன.இதே நேரம் மருத்துவ சான்றிதழ் இல்லாமல் உணவகங்கள் சிற்றுண்டி சாலைகளில் பணியாளர்களாக பணிபுரிந்த 45 பேர் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மீதும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்.சுமார் 6 மணித்தியாலங்கள் வரை இடம்பெற்ற சோதனைகளின் பின் போது பெருமளவிலான பழுதடைந்த மனித பாவனைக்கு உதவாத காலாவதியான உணவுப் பொருட்கள் சுகாதார அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement