திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்துக்குட்பட்ட பகுதியில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் நேற்றையதினம்(25) மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின்போது, பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், பல வியாபார நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திருகோணமலை பிராந்திய சுகாதார திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக உணவகங்கள், பேக்கரிகள், வியாபார நிலையங்கள், உணவு உற்பத்தி நிலையங்கள் போன்றவற்றில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின்போது குளிர்சாதன பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் விடயத்துக்கு பொறுப்பான அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இதன்போது எட்டு வியாபார நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு பல வியாபார நிலையங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் பணியாற்றும் ஊழியர்களின் மருத்துவச் சான்றிதழ்களை காட்சிப்படுத்கான ஆலோசனையும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
திருமலையில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் திடீர் பாய்ச்சல். சிக்கலில் வர்த்தகர்கள். திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்துக்குட்பட்ட பகுதியில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் நேற்றையதினம்(25) மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின்போது, பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், பல வியாபார நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. திருகோணமலை பிராந்திய சுகாதார திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக உணவகங்கள், பேக்கரிகள், வியாபார நிலையங்கள், உணவு உற்பத்தி நிலையங்கள் போன்றவற்றில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின்போது குளிர்சாதன பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் விடயத்துக்கு பொறுப்பான அதிகாரியொருவர் தெரிவித்தார்.இதன்போது எட்டு வியாபார நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு பல வியாபார நிலையங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் பணியாற்றும் ஊழியர்களின் மருத்துவச் சான்றிதழ்களை காட்சிப்படுத்கான ஆலோசனையும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.