• Nov 28 2024

இலங்கையில் இடம்பெறும் சீனி மோசடி - மக்களுக்கு எச்சரிக்கை

Chithra / Aug 16th 2024, 12:04 pm
image

 

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் சிவப்பு சீனி, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெள்ளை சீனியுடன் கலந்து விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.

இலங்கை சந்தைக்குள் பிரவேசிக்கும் சிவப்பு சீனி மோசடி தொடர்பான விபரங்களை நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளிப்படுத்தியுள்ளது.

எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. 

குறித்த வர்த்தகர் சில காலமாக இந்த மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

குறித்த இடத்தில் 50 கிலோ எடையுள்ள 2500 வெற்று சீனி பொதிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், அதில் உள்ள சீனி இந்திய சிவப்பு சீனி என சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதா என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவ்வாறு கலக்கப்பட்ட சிவப்பு சீனி ஒரு கிலோ 300 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் இடம்பெறும் சீனி மோசடி - மக்களுக்கு எச்சரிக்கை  இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் சிவப்பு சீனி, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெள்ளை சீனியுடன் கலந்து விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.இலங்கை சந்தைக்குள் பிரவேசிக்கும் சிவப்பு சீனி மோசடி தொடர்பான விபரங்களை நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளிப்படுத்தியுள்ளது.எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த வர்த்தகர் சில காலமாக இந்த மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.குறித்த இடத்தில் 50 கிலோ எடையுள்ள 2500 வெற்று சீனி பொதிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், அதில் உள்ள சீனி இந்திய சிவப்பு சீனி என சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதா என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.இவ்வாறு கலக்கப்பட்ட சிவப்பு சீனி ஒரு கிலோ 300 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement