• Jul 23 2025

நுகேகொடை மேம்பாலத்தில் கோர விபத்து; இளைஞன் உயிரிழப்பு!

Chithra / Jul 23rd 2025, 2:07 pm
image

 

ஹைலெவல் வீதியில் நுகேகொடை மேம்பாலத்தில், இன்று காலை, முச்சக்கர வண்டி ஒன்று, லொறி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முச்சக்கர வண்டி ஒன்று மஹரகம திசையிலிருந்து கொழும்பு திசை நோக்கி பயணித்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த முச்சக்கர வண்டியின் சாரதியும் பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவரும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில்,  பின் இருக்கையில் அமர்ந்திருந்த வத்தேகம பகுதியைச் சேர்ந்த 21 வயதான இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

குறித்த இளைஞனின் சடலம் களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மிரிஹான பொலிஸார்  மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

நுகேகொடை மேம்பாலத்தில் கோர விபத்து; இளைஞன் உயிரிழப்பு  ஹைலெவல் வீதியில் நுகேகொடை மேம்பாலத்தில், இன்று காலை, முச்சக்கர வண்டி ஒன்று, லொறி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.முச்சக்கர வண்டி ஒன்று மஹரகம திசையிலிருந்து கொழும்பு திசை நோக்கி பயணித்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தில் பலத்த காயமடைந்த முச்சக்கர வண்டியின் சாரதியும் பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவரும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.இந்நிலையில்,  பின் இருக்கையில் அமர்ந்திருந்த வத்தேகம பகுதியைச் சேர்ந்த 21 வயதான இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.குறித்த இளைஞனின் சடலம் களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மிரிஹான பொலிஸார்  மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement