ஈழத்தமிழனின் கூத்தாடி திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா மலேசியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்டமாக இடம்பெற்றது.
அவுஸ்ரேலியாவில் வசிக்கும் யாழ்ப்பாணம் இளவாளைப் பகுதியை பூர்வீகமாகக் கொண்ட கலைஞன் செல்வின் தாஸ் நடிப்பில் உருவான திரைப்படமே கூத்தாடி திரைப்படம்.
தென்னிந்திய திரைப்பட இயக்குநர் கவாஸ்கர் காளியப்பன் இயக்கத்தில் இசையமைப்பாளர் பிரதாப் கண்ணன் இசையில் செல்வின் தாஸ் நடிப்பில் உருவான கூத்தாடி திரைப்படம் வெகுவிரைவில் உலகத் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தமிழ் மக்களின் பாரம்பரிய கலையாக விளங்கும் கூத்து கலைஞர்களின் வாழ்க்கையை, அவற்றின் மரபைக் காப்பாற்றும் முயற்சியை, இன்றைய டிஜிட்டல் யுகத்தின் தாக்கத்தில் அவர்கள் சந்திக்கும் சவால்களையும் "கூத்தாடி" திரைப்படம் பிரதிபலிக்கின்றது.
பலத்த எதிர்பார்ப்புகளுடன் திரைப்படத்தைப் பார்க்கக் காத்திருக்கும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி கொடப்பதாக கூத்தாடி திரைப்படத்தின் பாடல் வெளியீடு அமைந்துள்ளது.
மலேசியாவில் சுமார் 2000க்கும் மேற்பட்டோரது பங்குபற்றலுன் கூத்தாடி திரைப்படத்தின் பாடல் வெளியீடு இடம்பெற்றமை படத்திற்கு கிடைத்த வரவேற்பு என்பதில் மிகையில்லை.
அண்மையில் அவுஸ்திரேலியாவில் ATFIA 2025 நடத்திய சர்வதேச விருது வழங்கும் விழாவில் இந்த திரைப்படம் சார்பில் செல்வின் தாஸ் சிறந்த நடிகர் விருதைப் பெற்றுள்ளதோடு குறித்த திரைப்படம் 4 விருதுகளை தனதாக்கியுள்ளது.
தமிழ் கலையை உலகம் முழுவதும் பார்வையிடச் செய்யும் ஒரு படைப்பாளியாக ஈழத்திற்குப் பெருமை சேர்த்துள்ள கலைஞன் செல்வின் தாஸூக்கு பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
மலேசியாவில் வௌியான கூத்தாடி திரைப்பட பாடல்; விருதுகளுடன் தொடரும் ஈழத்தமிழனின் சாதனை ஈழத்தமிழனின் கூத்தாடி திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா மலேசியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்டமாக இடம்பெற்றது. அவுஸ்ரேலியாவில் வசிக்கும் யாழ்ப்பாணம் இளவாளைப் பகுதியை பூர்வீகமாகக் கொண்ட கலைஞன் செல்வின் தாஸ் நடிப்பில் உருவான திரைப்படமே கூத்தாடி திரைப்படம். தென்னிந்திய திரைப்பட இயக்குநர் கவாஸ்கர் காளியப்பன் இயக்கத்தில் இசையமைப்பாளர் பிரதாப் கண்ணன் இசையில் செல்வின் தாஸ் நடிப்பில் உருவான கூத்தாடி திரைப்படம் வெகுவிரைவில் உலகத் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தமிழ் மக்களின் பாரம்பரிய கலையாக விளங்கும் கூத்து கலைஞர்களின் வாழ்க்கையை, அவற்றின் மரபைக் காப்பாற்றும் முயற்சியை, இன்றைய டிஜிட்டல் யுகத்தின் தாக்கத்தில் அவர்கள் சந்திக்கும் சவால்களையும் "கூத்தாடி" திரைப்படம் பிரதிபலிக்கின்றது.பலத்த எதிர்பார்ப்புகளுடன் திரைப்படத்தைப் பார்க்கக் காத்திருக்கும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி கொடப்பதாக கூத்தாடி திரைப்படத்தின் பாடல் வெளியீடு அமைந்துள்ளது. மலேசியாவில் சுமார் 2000க்கும் மேற்பட்டோரது பங்குபற்றலுன் கூத்தாடி திரைப்படத்தின் பாடல் வெளியீடு இடம்பெற்றமை படத்திற்கு கிடைத்த வரவேற்பு என்பதில் மிகையில்லை. அண்மையில் அவுஸ்திரேலியாவில் ATFIA 2025 நடத்திய சர்வதேச விருது வழங்கும் விழாவில் இந்த திரைப்படம் சார்பில் செல்வின் தாஸ் சிறந்த நடிகர் விருதைப் பெற்றுள்ளதோடு குறித்த திரைப்படம் 4 விருதுகளை தனதாக்கியுள்ளது. தமிழ் கலையை உலகம் முழுவதும் பார்வையிடச் செய்யும் ஒரு படைப்பாளியாக ஈழத்திற்குப் பெருமை சேர்த்துள்ள கலைஞன் செல்வின் தாஸூக்கு பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.