• Jul 23 2025

அடிப்படை மனித உரிமைகளை மீறிய ரணில் விக்ரமசிங்க - உயர் நீதிமன்றம் தீர்ப்பு

Chithra / Jul 23rd 2025, 11:48 am
image


முன்னாள் ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்க, நாடு தழுவிய அவசரகாலச் சட்டங்களை பிறப்பித்ததன் மூலம் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

படவிளக்கம் 

2022 ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் திகதி அப்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நாடு தழுவிய அவசரகாலச் சட்டங்களை பிறப்பித்ததன் மூலம் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 02 இன் கீழ் பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிறப்பித்த அவசரகாலச் சட்டங்கள் தன்னிச்சையானவை மற்றும் செல்லுபடியாகாதவை என்று உயர் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர்கள் ஆயத்தின் பெரும்பான்மையான நீதியரசர்கள் தீர்ப்பளித்தனர். 

பிரதம நீதியரசர் முர்து பெர்னாண்டோ இந்தத் தீர்ப்பை அறிவித்தார். 

இருப்பினும், மூன்று நீதியரசர்களில் ஒருவரான அர்ஜுன ஒபேசேகர தனது தீர்ப்பை வழங்கும்போது, பதில் ஜனாதிபதியின், அவசரகாலச் சட்டப் பிரகடனம் அடிப்படை மனித உரிமைகளை மீறவில்லை என்று அறிவித்துள்ளார்.

அடிப்படை மனித உரிமைகளை மீறிய ரணில் விக்ரமசிங்க - உயர் நீதிமன்றம் தீர்ப்பு முன்னாள் ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்க, நாடு தழுவிய அவசரகாலச் சட்டங்களை பிறப்பித்ததன் மூலம் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. படவிளக்கம் 2022 ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் திகதி அப்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நாடு தழுவிய அவசரகாலச் சட்டங்களை பிறப்பித்ததன் மூலம் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 02 இன் கீழ் பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிறப்பித்த அவசரகாலச் சட்டங்கள் தன்னிச்சையானவை மற்றும் செல்லுபடியாகாதவை என்று உயர் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர்கள் ஆயத்தின் பெரும்பான்மையான நீதியரசர்கள் தீர்ப்பளித்தனர். பிரதம நீதியரசர் முர்து பெர்னாண்டோ இந்தத் தீர்ப்பை அறிவித்தார். இருப்பினும், மூன்று நீதியரசர்களில் ஒருவரான அர்ஜுன ஒபேசேகர தனது தீர்ப்பை வழங்கும்போது, பதில் ஜனாதிபதியின், அவசரகாலச் சட்டப் பிரகடனம் அடிப்படை மனித உரிமைகளை மீறவில்லை என்று அறிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement