• Jul 23 2025

வவுணதீவு படுகொலை - பொலிஸ் பரிசோதகர் ஒருவர் சி.ஐ டி யினரால் கைது

Chithra / Jul 23rd 2025, 9:17 am
image


வவுணதீவு வலையிறவு பாலத்துக்கு அருகாமையில் இரு பொலிசாரை துப்பாக்கியால் சுட்டும் வெட்டியும் கொலை செய்த சம்பவதில் பிழையான தகவலை வழங்கிய பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

அவரை நேற்றுமுன்தினம் CID யினர் கொழும்பில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

படுகொலைச் சம்பவத்தின் உண்மை சம்பத்தை மூடிமறைக்கப்பட்டு விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளி மீது சுமத்தப்பட்டதை பொலிசார் கண்டறிந்தனர்.

இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பாக அப்போது மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியாக கடமையாற்றிவரும் தற்போது கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் பரிசோதகர் ஒருவரை சிஜடியினர் கொழும்புக்கு விசாரணைக்குஅழைத்து விசாரணையின் பின்னர் கைது செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

வவுணதீவு படுகொலை - பொலிஸ் பரிசோதகர் ஒருவர் சி.ஐ டி யினரால் கைது வவுணதீவு வலையிறவு பாலத்துக்கு அருகாமையில் இரு பொலிசாரை துப்பாக்கியால் சுட்டும் வெட்டியும் கொலை செய்த சம்பவதில் பிழையான தகவலை வழங்கிய பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை நேற்றுமுன்தினம் CID யினர் கொழும்பில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.படுகொலைச் சம்பவத்தின் உண்மை சம்பத்தை மூடிமறைக்கப்பட்டு விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளி மீது சுமத்தப்பட்டதை பொலிசார் கண்டறிந்தனர்.இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பாக அப்போது மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியாக கடமையாற்றிவரும் தற்போது கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் பரிசோதகர் ஒருவரை சிஜடியினர் கொழும்புக்கு விசாரணைக்குஅழைத்து விசாரணையின் பின்னர் கைது செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement