இந்தியாவின் டெல்லி விமான நிலையத்தில் தரை இறங்கிய ஏர் இந்தியா விமானத்தில் தீப்பரவல் ஏற்பட்டதால் அந்தப்பகுதியில் பதற்ற சூழல் உருவாகியது.
ஹொங்கொங்கில் இருந்து டெல்லிக்கு பயணித்த A1 - 315 ஏர் இந்தியா விமானம் டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கிய சிறிது நேரத்திலேயே தீப்பற்றியுள்ளது.
விமானம் ஓடுபாதையில் தரையிறங்கி பார்க்கிங் பகுதிக்குக் கொண்டுவரப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தின் ஏபியு பகுதியில் திடீரென தீப்பற்றியுள்ளது.
விமானம் தரையிறக்கப்பட்டு விமானத்திலிருந்து பயணிகள் இறங்கிக் கொண்டிருந்த வேளையிலேயே விமானத்தில் தீப்பிடித்ததாக ஏர் இந்தியா குழுமம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தீ விபத்தில் விமானத்தின் சில பகுதிகள் சேதமடைந்துள்ளது. எனினும் விமானிகள், பயணிகள் மற்றும் பணியாளர்கள் விமானத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தீ பரவலுக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாக ஏர் இந்தியா விமானசேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
குஜராத் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மருத்துவக் கல்லூரி மீது விழுந்து விபத்துக்குள்ளாகியதில் பயணிகள் உட்பட 260 பேர் உயிரிழந்தனர்.
உலகை உலுக்கிய இந்த ஏர் இந்தியா விமான விபத்திற்குப் பின்னர் பயணிகள் பதற்றத்துடனே விமானத்தில் பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் மீண்டும் ஏர் இந்தியா விமானம் தீப்பிடித்து விபத்துக்குள்ளாகியது அனைவர் மத்தியிலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தரையிறங்கிய நொடியில் தீப்பரவல்; ஏர் இந்தியாவிற்கு தொடரும் நெருக்கடி இந்தியாவின் டெல்லி விமான நிலையத்தில் தரை இறங்கிய ஏர் இந்தியா விமானத்தில் தீப்பரவல் ஏற்பட்டதால் அந்தப்பகுதியில் பதற்ற சூழல் உருவாகியது. ஹொங்கொங்கில் இருந்து டெல்லிக்கு பயணித்த A1 - 315 ஏர் இந்தியா விமானம் டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கிய சிறிது நேரத்திலேயே தீப்பற்றியுள்ளது. விமானம் ஓடுபாதையில் தரையிறங்கி பார்க்கிங் பகுதிக்குக் கொண்டுவரப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தின் ஏபியு பகுதியில் திடீரென தீப்பற்றியுள்ளது. விமானம் தரையிறக்கப்பட்டு விமானத்திலிருந்து பயணிகள் இறங்கிக் கொண்டிருந்த வேளையிலேயே விமானத்தில் தீப்பிடித்ததாக ஏர் இந்தியா குழுமம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. தீ விபத்தில் விமானத்தின் சில பகுதிகள் சேதமடைந்துள்ளது. எனினும் விமானிகள், பயணிகள் மற்றும் பணியாளர்கள் விமானத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தீ பரவலுக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாக ஏர் இந்தியா விமானசேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.குஜராத் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மருத்துவக் கல்லூரி மீது விழுந்து விபத்துக்குள்ளாகியதில் பயணிகள் உட்பட 260 பேர் உயிரிழந்தனர். உலகை உலுக்கிய இந்த ஏர் இந்தியா விமான விபத்திற்குப் பின்னர் பயணிகள் பதற்றத்துடனே விமானத்தில் பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் மீண்டும் ஏர் இந்தியா விமானம் தீப்பிடித்து விபத்துக்குள்ளாகியது அனைவர் மத்தியிலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.