• Nov 25 2024

தமிழர்களின் கேள்விக்கு இன்று அநுர யாழில் பதில் தர வேண்டும் - சுமந்திரன் கோரிக்கை!

Tamil nila / Nov 10th 2024, 8:16 am
image

"தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பில் தமது திட்டம் யாது என்பதை இன்று ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பிரச்சாரத்துக்காக யாழ்ப்பாணம் வரும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளிப்படையாகத் தமிழ் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்."

- இவ்வாறு கோரிக்கை விடுத்திருக்கின்றார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் கட்சியின் யாழ். மாவட்ட வேட்பாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்.

நேற்று சாவகச்சேரியில் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட வேட்பாளர் சட்டத்தரணி கேசவன் சயந்தனின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட பிரசாரக் கூட்டத்திலேயே இத்தகைய கோரிக்கையை பகிரங்கமாக முன்வைத்தார் சுமந்திரன்.

சாவகச்சேரி பஸ் நிலையப் பகுதியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சுமந்திரன் தெரிவித்த கருத்துக்களின் சாரம் வருமாறு:-

''கடந்த தடவை ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்துக்காகக் கடைசியாக அநுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணம் வந்திருந்தபோது தமிழ் மக்களிடம் ஒரு கேள்வியை எழுப்பி இருந்தார்.

தென்னிலங்கையில் ஓர் அதிகார மாற்றத்துக்கு அந்த மக்கள் தயாராகி விட்டார்கள். அந்த மாற்றத்தில் தமிழ் மக்கள் பங்களிக்க வேண்டாமா? பங்களிக்கவில்லை என்ற செய்தியை தென்னிலங்கை மக்களுக்குத்  தெரிவிக்காமல் இருக்க நடவடிக்கை எடுங்கள்' என்ற சாரப்பட அநுரகுமார திஸாநாயக்க பேசியிருந்தார்.

அதற்கு அடுத்த நாளே அந்தக் கேள்விக்கு நான் யாழ்ப்பாணத்தில் வைத்துப் பதில் அளித்து இருந்தேன்.

தெற்கு மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தில் பங்களிக்க வடக்கு - கிழக்கு தமிழ் மக்கள் தயாராக இருக்கின்றார்கள். ஆனால், கடந்த 75 வருடங்களாக இந்த நாட்டில் நீதி, நியாயமான மாற்றத்துக்குத் தமிழர்கள் முயன்று போராடி வருகின்றார்கள். அந்த மாற்றத்தில் தென்னிலங்கை இன்னும் சரியான முறையில் பங்களிக்கவில்லை. முதலில் அந்த மாற்றத்துக்குப்  பங்களியுங்கள். அதன் பின்னர் தெற்கு விரும்பும் மாற்றத்துக்கு வடக்கு - கிழக்கு மக்கள் சேர்ந்து ஒத்துழைப்பார்கள் என்று நான் கூறியிருந்தேன்.

கடந்த 75 வருடங்களாக தமிழ் மக்கள் முன்னெடுக்கும் மாற்றத்துக்கான அந்த முயற்சியில் தமது பங்களிப்பு யாது, தாம் யாது செய்யப் போகின்றார், தமது திட்டம் என்ன என்பதை யாழ்ப்பாணத்துக்குத் தேர்தல் பிரசாரத்துக்காக இன்று ஞாயிற்றுக்கிழமை வரும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தமிழ் மக்களுக்குப் பதில் அளித்து தெளிவுபடுத்த வேண்டும்.'' - என்று சுமந்திரன் தமது சாவகச்சேரி பிரசாரக் கூட்ட உரையில் மேலும் தெரிவித்திருக்கின்றார்.

தமிழர்களின் கேள்விக்கு இன்று அநுர யாழில் பதில் தர வேண்டும் - சுமந்திரன் கோரிக்கை "தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பில் தமது திட்டம் யாது என்பதை இன்று ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பிரச்சாரத்துக்காக யாழ்ப்பாணம் வரும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளிப்படையாகத் தமிழ் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்."- இவ்வாறு கோரிக்கை விடுத்திருக்கின்றார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் கட்சியின் யாழ். மாவட்ட வேட்பாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்.நேற்று சாவகச்சேரியில் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட வேட்பாளர் சட்டத்தரணி கேசவன் சயந்தனின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட பிரசாரக் கூட்டத்திலேயே இத்தகைய கோரிக்கையை பகிரங்கமாக முன்வைத்தார் சுமந்திரன்.சாவகச்சேரி பஸ் நிலையப் பகுதியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சுமந்திரன் தெரிவித்த கருத்துக்களின் சாரம் வருமாறு:-''கடந்த தடவை ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்துக்காகக் கடைசியாக அநுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணம் வந்திருந்தபோது தமிழ் மக்களிடம் ஒரு கேள்வியை எழுப்பி இருந்தார்.தென்னிலங்கையில் ஓர் அதிகார மாற்றத்துக்கு அந்த மக்கள் தயாராகி விட்டார்கள். அந்த மாற்றத்தில் தமிழ் மக்கள் பங்களிக்க வேண்டாமா பங்களிக்கவில்லை என்ற செய்தியை தென்னிலங்கை மக்களுக்குத்  தெரிவிக்காமல் இருக்க நடவடிக்கை எடுங்கள்' என்ற சாரப்பட அநுரகுமார திஸாநாயக்க பேசியிருந்தார்.அதற்கு அடுத்த நாளே அந்தக் கேள்விக்கு நான் யாழ்ப்பாணத்தில் வைத்துப் பதில் அளித்து இருந்தேன்.தெற்கு மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தில் பங்களிக்க வடக்கு - கிழக்கு தமிழ் மக்கள் தயாராக இருக்கின்றார்கள். ஆனால், கடந்த 75 வருடங்களாக இந்த நாட்டில் நீதி, நியாயமான மாற்றத்துக்குத் தமிழர்கள் முயன்று போராடி வருகின்றார்கள். அந்த மாற்றத்தில் தென்னிலங்கை இன்னும் சரியான முறையில் பங்களிக்கவில்லை. முதலில் அந்த மாற்றத்துக்குப்  பங்களியுங்கள். அதன் பின்னர் தெற்கு விரும்பும் மாற்றத்துக்கு வடக்கு - கிழக்கு மக்கள் சேர்ந்து ஒத்துழைப்பார்கள் என்று நான் கூறியிருந்தேன்.கடந்த 75 வருடங்களாக தமிழ் மக்கள் முன்னெடுக்கும் மாற்றத்துக்கான அந்த முயற்சியில் தமது பங்களிப்பு யாது, தாம் யாது செய்யப் போகின்றார், தமது திட்டம் என்ன என்பதை யாழ்ப்பாணத்துக்குத் தேர்தல் பிரசாரத்துக்காக இன்று ஞாயிற்றுக்கிழமை வரும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தமிழ் மக்களுக்குப் பதில் அளித்து தெளிவுபடுத்த வேண்டும்.'' - என்று சுமந்திரன் தமது சாவகச்சேரி பிரசாரக் கூட்ட உரையில் மேலும் தெரிவித்திருக்கின்றார்.

Advertisement

Advertisement

Advertisement