• May 02 2025

இன்று முதல் 14 ஆம் திகதி வரை இலங்கைக்கு மேலாக உச்சம் கொடுக்கும் சூரியன்

Chithra / Apr 5th 2025, 8:05 am
image

 

சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று முதல் 14ம் திகதி வரையான காலப்பகுதியில் சூரியன் இலங்கைக்கு மேலாக உச்சம் கொடுக்கும் என சிரேஸ்ட வானிலை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

இதன் அடிப்படையில் இன்று மதியம் சுமார் 12.13 மணியளவில் ஹகவ,மிட்டியாகொட, எலமல்தெனிய, அம்பகொலவெவ மற்றும் வுன்தல போன்ற இடங்களுக்கு மேலாக உச்சம் கொடுக்கின்றது

தென் மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

மத்திய ,சப்ரகமுவ, மேல், தென் மற்றும் ஊவா  மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றரிலும் கூடிய பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

நீர்கொழும்பு தொடக்கம் காலி, ஹம்பாந்தோட்டை, பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல்  பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு  20 - 30 கிலோமீற்றர் வேகத்தில் தென்மேற்குத்  திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.  

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இன்று முதல் 14 ஆம் திகதி வரை இலங்கைக்கு மேலாக உச்சம் கொடுக்கும் சூரியன்  சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று முதல் 14ம் திகதி வரையான காலப்பகுதியில் சூரியன் இலங்கைக்கு மேலாக உச்சம் கொடுக்கும் என சிரேஸ்ட வானிலை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் இன்று மதியம் சுமார் 12.13 மணியளவில் ஹகவ,மிட்டியாகொட, எலமல்தெனிய, அம்பகொலவெவ மற்றும் வுன்தல போன்ற இடங்களுக்கு மேலாக உச்சம் கொடுக்கின்றதுதென் மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய ,சப்ரகமுவ, மேல், தென் மற்றும் ஊவா  மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றரிலும் கூடிய பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.நீர்கொழும்பு தொடக்கம் காலி, ஹம்பாந்தோட்டை, பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.கடல்  பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு  20 - 30 கிலோமீற்றர் வேகத்தில் தென்மேற்குத்  திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.  நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement

Buy Now