• Apr 19 2025

சட்டவிரோதமான முறையில் கொண்டுவர முற்பட்ட அழகுசாதனப் பொருட்கள் மீட்பு

Thansita / Apr 17th 2025, 8:54 pm
image

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட அழகுசாதனப் பொருட்களை  மன்னாரின் கிராஞ்சி கடல் பகுதியில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது,கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடல் வழிகள் ஊடாக மேற்கொள்ளப்படும் பல்வேறு ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் பொருட்டு, கடற்படையினர், தீவைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் கடற்கரையை உள்ளடக்கி வழக்கமான ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

அதன்படி, வட மத்திய கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பலான புவனேகவுடன் இணைக்கப்பட்ட விரைவு நடவடிக்கை படைப் பிரிவினால், மன்னாருக்கு வடக்கே உள்ள கிரன்சி கடல் பகுதியில் மேற்கொண்ட இந்த சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது, கடலில் மிதந்துக் கொண்டிருந்த சந்தேகத்திற்கிடமான இரண்டு (02) பார்சல்கள் பரிசோதிக்கப்பட்டன. 

சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மூவாயிரத்து இருநூறு (3200) ஷம்போ பக்கெட்டுகள், முந்நூற்று எழுபத்தாறு (376) அழகுசாதனப் பொருட்கள் மற்றும் எழுபத்தைந்து (75) அழகுசாதன சவர்க்காரங்கள் உள்ளிட்ட அழகுசாதனப் பொருட்களை கடற்படையினர் கைப்பற்றினர்.

இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட அழகுசாதனப் பொருட்களை தரைக்கு கொண்டு வர முடியாமல் கடலில் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டு, இந்த நடவடிக்கையின் போது கடற்படையால் கைப்பற்றப்பட்ட அழகுசாதனப் பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஜெயபுரம் காவல் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டன

சட்டவிரோதமான முறையில் கொண்டுவர முற்பட்ட அழகுசாதனப் பொருட்கள் மீட்பு சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட அழகுசாதனப் பொருட்களை  மன்னாரின் கிராஞ்சி கடல் பகுதியில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது,கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.கடல் வழிகள் ஊடாக மேற்கொள்ளப்படும் பல்வேறு ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் பொருட்டு, கடற்படையினர், தீவைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் கடற்கரையை உள்ளடக்கி வழக்கமான ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.அதன்படி, வட மத்திய கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பலான புவனேகவுடன் இணைக்கப்பட்ட விரைவு நடவடிக்கை படைப் பிரிவினால், மன்னாருக்கு வடக்கே உள்ள கிரன்சி கடல் பகுதியில் மேற்கொண்ட இந்த சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது, கடலில் மிதந்துக் கொண்டிருந்த சந்தேகத்திற்கிடமான இரண்டு (02) பார்சல்கள் பரிசோதிக்கப்பட்டன. சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மூவாயிரத்து இருநூறு (3200) ஷம்போ பக்கெட்டுகள், முந்நூற்று எழுபத்தாறு (376) அழகுசாதனப் பொருட்கள் மற்றும் எழுபத்தைந்து (75) அழகுசாதன சவர்க்காரங்கள் உள்ளிட்ட அழகுசாதனப் பொருட்களை கடற்படையினர் கைப்பற்றினர்.இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட அழகுசாதனப் பொருட்களை தரைக்கு கொண்டு வர முடியாமல் கடலில் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டு, இந்த நடவடிக்கையின் போது கடற்படையால் கைப்பற்றப்பட்ட அழகுசாதனப் பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஜெயபுரம் காவல் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டன

Advertisement

Advertisement

Advertisement