• May 02 2025

தேர்தல் பிரசாரப் பணிகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு..!

Sharmi / May 2nd 2025, 10:15 am
image

எதிர்வரும் 6ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான பிரசாரப் பணிகள் நாளைய தினம் நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு 48 மணித்தியாலங்களுக்கு அதாவது நாளைய தினம் நள்ளிரவு 12 மணிக்கு முன்னதாக தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீனக் குழுக்கள், வேட்பாளர்கள் தங்களது பிரசாரப் பணிகளை நிறைவு செய்து கொள்ள வேண்டுமென தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். 

தேர்தல் பிரசாரப் பணிகள் நிறைவடைந்ததன் பின்னரான காலத்தில் பிரசாரத்தில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தேர்தல் பிரசாரப் பணிகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு. எதிர்வரும் 6ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான பிரசாரப் பணிகள் நாளைய தினம் நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு 48 மணித்தியாலங்களுக்கு அதாவது நாளைய தினம் நள்ளிரவு 12 மணிக்கு முன்னதாக தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீனக் குழுக்கள், வேட்பாளர்கள் தங்களது பிரசாரப் பணிகளை நிறைவு செய்து கொள்ள வேண்டுமென தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். தேர்தல் பிரசாரப் பணிகள் நிறைவடைந்ததன் பின்னரான காலத்தில் பிரசாரத்தில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement