• Apr 26 2025

முதல் முறையாக சிஎஸ்கேவை வீழ்த்தி அதிரடி சாதனை படைத்த சன்ரைசர்ஸ் அணி

Chithra / Apr 26th 2025, 7:54 am
image


ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏழாவது லீக் போட்டியில் தோல்வியைத் தழுவி தொடரை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தொடரின் 43ஆவது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.

நாணயசுழற்சியில் வென்ற சன்ரைசர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.இதனை அடுத்து களமிறங்கிய சிஎஸ்கே அணியில் தொடக்க வீரர்கள் ஷேக் ரசித் டக் அவுட் ஆகி வெளியேற ஆயுஷ் மாத்ரே 19 பந்துகளில் 30 ஓட்டங்கள் எடுத்தனர் .

ஷாம்கரன் 10 பந்துகளில் ஒன்பது ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார்.ஜடேஜா 17 பந்துகளில் 21 ஓட்டங்கள் சேர்த்தார்.

சிஎஸ்கே அணிக்காக தங்களுடைய முதல் போட்டியில் விளையாடிய பிரவீஸ் அதிரடியாக விளையாடி 25 பந்துகளில் அவர் 42 ஓட்டங்கள் எடுத்தார். சிவம் துபே 12 ஓட்டங்களுடன் வெளியேற தோனி 6 ஓட்டங்களில் முக்கிய கட்டத்தில் ஆட்டம் இழந்திருந்தார். 

தீபக் ஹூடா கடைசி வரை போராடி 21 பந்துகளில் 22 ஓட்டங்கள் எடுத்தார். இதன் மூலம்சிஎஸ்கே அணி 19.5 ஓவர்களில் 154 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.5 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் அணி களம் இறங்கியது.

அபிஷேக் ஷர்மா முதல் ஓவரிலே ஆட்டமிழக்க, டிராவிஸ் ஹெட் 19 ஓட்டங்களில் வெளியே அதிரடி வீரர் ஹென்றிச் கிளாசன் 7 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார்.

இஷான் கிஷன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 34 பந்துகளில் 44 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் அனிகீத் வர்மா 19 ஓட்டங்கள் எடுக்க வெற்றி யாருக்கு என்ற பரபரப்பு நிலைமை ஏற்பட்டது.

எனினும் கமிந்து மெண்டீஸ் மற்றும் நிதிஷ்குமார் ரெட்டி ஆகியோர்  விளையாடி கமிந்து மெண்டீஸ் 22 பந்துகளின் 32 ஓட்டங்கள் சேர்த்தார். நிதீஷ்குமார் 19 ஓட்டங்கள் எடுக்க சன்ரைசர்ஸ் அணி 18.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 155 ஓட்டங்கள் எடுத்து வெற்றியை பெற்றது.

சிஎஸ்கே பந்துவீச்சு தரப்பில் நூர் அஹமத் இரண்டு விக்கெட்டுளும் கலீல் அஹமத், அன்சில் கம்போஜ், ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்கள்.

இதன் மூலம் 6 முறை சன்ரைசர்ஸ் அணி சிஎஸ்கேவை சேப்பாக்கத்தில் எதிர்கொண்டு முதல் வெற்றியை பெற்றுள்ளதுடன் இது மட்டுமில்லாமல், 2010ஆம் ஆண்டு ஏப்ரல் 25ம் திகதி தான் சிஎஸ்கே முதல் முறையாக தோனி தலைமையில் அணி ஐபிஎல் கோப்பையை வென்று இருந்ததமையும் இங்கு  குறிப்பிடத்தக்கது.

முதல் முறையாக சிஎஸ்கேவை வீழ்த்தி அதிரடி சாதனை படைத்த சன்ரைசர்ஸ் அணி ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏழாவது லீக் போட்டியில் தோல்வியைத் தழுவி தொடரை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.இந்த நிலையில் தொடரின் 43ஆவது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.நாணயசுழற்சியில் வென்ற சன்ரைசர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.இதனை அடுத்து களமிறங்கிய சிஎஸ்கே அணியில் தொடக்க வீரர்கள் ஷேக் ரசித் டக் அவுட் ஆகி வெளியேற ஆயுஷ் மாத்ரே 19 பந்துகளில் 30 ஓட்டங்கள் எடுத்தனர் .ஷாம்கரன் 10 பந்துகளில் ஒன்பது ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார்.ஜடேஜா 17 பந்துகளில் 21 ஓட்டங்கள் சேர்த்தார்.சிஎஸ்கே அணிக்காக தங்களுடைய முதல் போட்டியில் விளையாடிய பிரவீஸ் அதிரடியாக விளையாடி 25 பந்துகளில் அவர் 42 ஓட்டங்கள் எடுத்தார். சிவம் துபே 12 ஓட்டங்களுடன் வெளியேற தோனி 6 ஓட்டங்களில் முக்கிய கட்டத்தில் ஆட்டம் இழந்திருந்தார். தீபக் ஹூடா கடைசி வரை போராடி 21 பந்துகளில் 22 ஓட்டங்கள் எடுத்தார். இதன் மூலம்சிஎஸ்கே அணி 19.5 ஓவர்களில் 154 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.5 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் அணி களம் இறங்கியது.அபிஷேக் ஷர்மா முதல் ஓவரிலே ஆட்டமிழக்க, டிராவிஸ் ஹெட் 19 ஓட்டங்களில் வெளியே அதிரடி வீரர் ஹென்றிச் கிளாசன் 7 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார்.இஷான் கிஷன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 34 பந்துகளில் 44 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் அனிகீத் வர்மா 19 ஓட்டங்கள் எடுக்க வெற்றி யாருக்கு என்ற பரபரப்பு நிலைமை ஏற்பட்டது.எனினும் கமிந்து மெண்டீஸ் மற்றும் நிதிஷ்குமார் ரெட்டி ஆகியோர்  விளையாடி கமிந்து மெண்டீஸ் 22 பந்துகளின் 32 ஓட்டங்கள் சேர்த்தார். நிதீஷ்குமார் 19 ஓட்டங்கள் எடுக்க சன்ரைசர்ஸ் அணி 18.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 155 ஓட்டங்கள் எடுத்து வெற்றியை பெற்றது.சிஎஸ்கே பந்துவீச்சு தரப்பில் நூர் அஹமத் இரண்டு விக்கெட்டுளும் கலீல் அஹமத், அன்சில் கம்போஜ், ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்கள்.இதன் மூலம் 6 முறை சன்ரைசர்ஸ் அணி சிஎஸ்கேவை சேப்பாக்கத்தில் எதிர்கொண்டு முதல் வெற்றியை பெற்றுள்ளதுடன் இது மட்டுமில்லாமல், 2010ஆம் ஆண்டு ஏப்ரல் 25ம் திகதி தான் சிஎஸ்கே முதல் முறையாக தோனி தலைமையில் அணி ஐபிஎல் கோப்பையை வென்று இருந்ததமையும் இங்கு  குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement