• Nov 26 2024

கட்சி அரசியலுக்கு அப்பால் தமிழினத்தின் கோரிக்கையாக தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவு- ஸ்ரீநேசன் தெரிவிப்பு..!

Sharmi / Sep 14th 2024, 4:30 pm
image

கட்சி அரசியலுக்கு அப்பால் சென்று தமிழ் இனத்தின் கோரிக்கையாக வேண்டுகோளாக அவர்களுடைய பிரச்சனைகளை சொல்லுகின்ற கருவியாக பயன்படுத்த வேண்டும்.அதன் அடிப்படையில் தாங்கள் தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிக்க முன்வந்துள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளை செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

மட்டு.ஊடக அமையத்தில் இன்றையதினம்(14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

தற்பொழுது ஜனாதிபதி தேர்தல் இடம் பெற இருக்கின்றது இந்த தேர்தல் ஆனது கடந்த எட்டு ஜனாதிபதி தேர்தலை விடவும் முக்கியமான ஒரு தேர்தலாக கருதப்படுகின்றது காரணம் இந்த தேர்தலில் மாத்திரமே தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தி இருக்கின்றார்கள்.

இந்த பொது வேட்பாளரை 83 சமூக கட்டமைப்புகளும் 10 தமிழ் தேசிய கட்சிகளும் இணைந்து இவரை நிறுத்தி இருக்கின்றது என்றால் இந்த பொது வேட்பாளர் என்பது கட்சி அரசியலுக்கு அப்பால் தமிழினத்தின் சார்பாக இவர் நிறுத்தப்பட்டிருக்கின்றார்.

தமிழர்கள் ஒற்றுமையாக இந்த இடத்தில் பயணிக்க வேண்டும் ஒற்றுமையாக பயணிக்க வேண்டும் ஒரே குரலில் தங்களது பிரச்சினைகளை சர்வதேசத்திற்கும் உள்நாட்டிற்கும் செல்ல வேண்டும் எங்களுடைய தீர்வுகளையும் சொல்ல வேண்டும் என்கின்ற அடிப்படையில் இந்த தமிழ் பொது வேட்பாளர் சங்கு சின்னத்தில் அரியநேந்திரன் அவர்கள் நிறுத்தப்பட்டு இருக்கின்றார்.

இந்த விடயத்தை கட்சி அரசியலுக்கு அப்பால் சென்று தமிழ் இனத்தின் கோரிக்கையாக வேண்டுகோளாக அவர்களுடைய பிரச்சனைகளை சொல்லுகின்ற கருவியாக பயன்படுத்த வேண்டும் எனவே நாங்கள் தமிழரசு கட்சியை சேர்ந்தவர்கள் எங்களுடைய அருள் வாக்கு கூறுகின்ற அருட்தந்தை யோசப் மேரி அடிகளார் அவர்கள் அருமையாக கூறினார் தந்தை செல்வா அவர்களின் காலத்தில் இருந்து பயணித்தவர் தளராத வயதிலும் கூட தமிழ் தேசியப் பற்றோடு தமிழ் உணர்வோடு இந்த தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்று அவர் கூறினால் நாங்கள் கேட்டு தான் ஆக வேண்டும் ஏனென்றால் அவர் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அரசியலில் தடம் புரளாமல் ஆன்மீகப் பணிகளும் சரி அரசியல் பணியிலும் சரி மிகவும் அருமையாக பணியாற்றியவர்.

அவர் கூறுகின்றார் சங்கு சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும். தமிழர்களை அவர்களது பிரச்சனைகளை வெளி உலகத்திற்கு கொண்டுவர வேண்டும் என அவர் எடுத்துரைக்கின்றார்.

எனவே ஒரு மூத்த அருட்தந்தை அவர்களுடைய அருள்வாக்கு நாங்கள் பின்பற்றுவதற்கு நாங்கள் திட சந்தர்ப்பம் எடுத்து இருக்கின்றோம் எனவே நடைபெறுகின்ற 21 ஆம் தேதி நடைபெறுகின்ற இந்த தேர்தலில் தமிழர்கள் ஒற்றுமையாக இருக்கின்றோம் தமிழ் சமூகம் ஒற்றுமையாக இருக்கின்றோம் ஒரே குரலில் எங்களுடைய பிரச்சனைகளை கூறப்போகின்றோம். காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனை சர்வதேச விசாரணை வேண்டும் என்று கேட்டோம் உள்நாட்டு பொறிமுறை ஊடாக இந்த பிரச்சினைகளை தீர்க்கிறோம் எனக் கூறினார்கள் ஒன்றுமே நடைபெறவில்லை 15 ஆண்டுகளாக.

அடுத்ததாக தொல்லியல் இடங்களை அடையாளப்படுத்துகின்றோம் எனக் கூறிக்கொண்டு எங்களுடைய கலாசார நிலையங்கள் அளிக்கப்படுகின்றது அந்த இடங்களில் விகாரங்கள் கட்டப்படுகின்ற செயற்பாடுகள் இடம்பெறுகின்றது அந்த இடங்களில் எல்லாம் பௌத்த விகாரைகள் இருந்தது என்று கூறிவிட்டு அந்த இடங்களை ஆக்கிரமிக்கின்ற செயல்பாடுகள் இடம்பெற்று கொண்டிருக்கின்றது.

இன்றும் கூட பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படாமல் தமிழ் மக்களை யுத்தத்தின் பின்னரும் ஒடுக்குகின்ற அந்த சட்டத்தை அவர்கள் வைத்திருக்கின்றார்கள் எங்களுடைய தமிழ் கைதிகள் முழுமையாக இன்னமும் விடுதலை செய்யப்படவில்லை இது மாத்திரம் அல்லாமல் வடக்கு கிழக்கில் ராணுவத்தின் ஆக்கிரமிப்பு என்பது இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

மயிலத்தமடு மாதவனை இந்த மேச்சல் தரை இப்போதும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றார்கள் 365 நாட்களுக்கும் மேலாக அகிம்சை ரீதியாக வீதியில் இருந்து போராடிய அந்த கால்நடை வளர்ப்பாளர்களுக்கு எந்த ஒரு தீர்வும் இந்த ஜனாதிபதியால் கொடுக்கப்படவில்லை.

100 நாட்களுக்கு மேலாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை முழுமையாகி தரவேண்டும் என போராடினார்கள் அதுவும் கேட்கப்படவில்லை.

எட்டு ஜனாதிபதிகளின் ஆட்சிக் காலத்திலும் அவர்களுக்கு வாக்களித்து இருந்தும் கூட அவர்கள் எங்களை தாராளமாக ஏமாற்றி இருக்கின்றார்கள் இந்த ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தலிலும் கூட சில வேளைகளில் பொது வேட்பாளர் திறக்கப்படாமல் இருந்திருந்தால் நாங்கள் யாரோ ஒரு சிங்கள ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களித்து இருப்போம் ஆனால் முதல் தடவையாக இந்த வேட்பாளர் நிறுத்தப்பட்டு இருக்கின்ற போது அதே போன்று தமிழர்களின் பிரச்சினைகளை கோரிக்கைகளை வைத்து இறக்கப்பட்டிருக்கின்றார் இவ்வாறான ஒரு சூழ்நிலையில் நாங்கள் தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்க வேண்டிய தார்மீக கடமை எங்களுக்கு இருக்கின்றது அதனை விடுத்து மீண்டும் மீண்டும் ஏமாற்றப்படுவதற்கு நாங்கள் வழி கூறக்கூடாது.

கேட்கின்றார்கள் இந்த வேட்பாளர் வெல்லப் போகின்றாரா என்று இவருக்கு வாக்களிப்பதால் என்ன கிடைக்கப் போகின்றது எனக்கு கேட்கின்றார்கள் நான் ஒன்றைக் கேட்க விரும்புகின்றேன் எட்டு ஜனாதிபதிகளுக்கு நாங்கள் வாக்களித்தோம் எதைப் பெற்றிருக்கின்றோம் ஒன்றையுமே அவர்கள் தரவில்லை அவர்களை வெற்றி பெற செய்திருக்கின்றோம் கடந்த நல்லாட்சி காலத்தில் மைத்திரிபால ஸ்ரீசேனா அவர்களை வெற்றி பெறச் செய்தோம் மஹிந்த ராஜபக்சே அவர்களை தோற்கடித்தோம் பின்னர் மைத்திரிபாலு என்ன செய்தார் 2018 ஆம் ஆண்டு நாங்கள் யாரை தோற்கடிக்க வேண்டும் என்று மைத்திரிக்கு வாக்களித்தோமோ அவர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை பிரதம மந்திரியாக வைத்துக்கொண்டு அவர் அழகு பார்க்கின்றார் பேச்சுவார்த்தை இடம்பெற்றது அரசியல் யாப்பு தருவோம் என கூறினார்கள் ஏமாற்றி விட்டார்கள்.

சந்திரிகா அம்மையார் சமாதான தேவதையாக வந்தார் என்ன செய்தார் கடைசியாக அவரும் ஏமாற்றிவிட்டு சென்றுவிட்டார்.

எனவே எங்களுடைய அரசியல் வரலாறு என்பது ஏமாற்றப்படுகின்ற வரலாறாக இருக்கின்றது அவர்கள் ஏமாற்றுகின்ற வரலாறாக காணப்படுகின்றது எனவே தமிழ் பேசும் மக்களுக்கும் தமிழ் சமூகங்களுக்கும் நாங்கள் கூறக்கூடிய விடயம் என்னவென்றால் வடக்கு கிழக்கு மாத்திரம் அல்ல அனைத்து மக்களும் எமக்கு தொலைபேசி அழைப்பின் மூலம் கூறுகின்றார்கள் நாங்களும் இவருக்கு ஆதரவு வழங்குவதற்கு சித்தமாக இருக்கின்றோம் என்று.

எனவே நியாயத்தின் பேரில் உரிமையின் பேரில் நாங்கள் பதிக்கப்பட்ட சமூகம் என்பதன் பெயரில் நாங்கள் நீதியை நிலை நிறுத்துவதற்காக ஏமாற்றப்பட மாட்டோம் என்பதை எடுத்துக் கூறுவதற்காக எமக்கு ராயப்பு ஜோசப் ஆண்டகை கூறியது போன்று இறுதி யுத்தத்தின் போது ஒரு லட்சத்து 46 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டு இருக்கின்றார்கள் என்ற செய்தியை கூறி இருக்கின்றார் அவர் கூட அந்த இழப்புக்குரிய நீதியை பெற வேண்டும் என முயற்சித்தார் அவரும் கண்ணை மூடிவிட்டார் ஆனால் நீதி எங்களுக்கு கிடைக்கவில்லை.

எனவே ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை அழகாக கூறியது உண்மையை கண்டறிய வேண்டும் அவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்று அடுத்ததாக மீண்டும் இவ்வாறான அவலங்கள் ஏற்படாமல் இனப்பிரச்சனைக்குரிய நிரந்தரமான தீர்வை பெற வேண்டும் என கூறுகின்றார்கள் எதுவுமே இடம்பெறவில்லை 15 வருடங்களாக யுத்தத்தின் பின்னர் எங்களை ஏமாற்றி இருக்கின்றார்கள்.

மீண்டும் மீண்டும் நாங்கள் ஏமாறுவதற்கு தயாராக இல்லை இப்போது ஒரு கதை பேசப்படுகின்றது மீளபெற முடியாத அதிகாரத்தை தந்திருக்கின்றார் என்கின்ற ஒரு கதை அழகாக கூறப்படுகின்றது.

மீளப்பெற முடியாத அதிகாரம் என்றால் எந்த விடயத்திற்கு மீளப்பெற முடியாத அதிகாரம் தரப்பட்டு இருக்கின்றது என கூற வேண்டும் சமஸ்டி ஆட்சி முறையில் மீளப்பெற முடியாத இந்த இந்த அதிகாரங்கள் தரப்பட்டிருக்கின்றது என கூற வேண்டும் இது மொட்டை கடிதம் எழுதுவது போன்று மீளப்பெற முடியாத அதிகாரம் தந்ததனால் அதற்குள் சமஷ்டி இருக்கின்றது என்று எங்களுடைய மக்களை ஏமாற்றுவதற்கு எம்மவர்கள் பார்க்கின்றார்கள் எனவும் தெரிவித்தார்.

கட்சி அரசியலுக்கு அப்பால் தமிழினத்தின் கோரிக்கையாக தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவு- ஸ்ரீநேசன் தெரிவிப்பு. கட்சி அரசியலுக்கு அப்பால் சென்று தமிழ் இனத்தின் கோரிக்கையாக வேண்டுகோளாக அவர்களுடைய பிரச்சனைகளை சொல்லுகின்ற கருவியாக பயன்படுத்த வேண்டும்.அதன் அடிப்படையில் தாங்கள் தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிக்க முன்வந்துள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளை செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.மட்டு.ஊடக அமையத்தில் இன்றையதினம்(14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,தற்பொழுது ஜனாதிபதி தேர்தல் இடம் பெற இருக்கின்றது இந்த தேர்தல் ஆனது கடந்த எட்டு ஜனாதிபதி தேர்தலை விடவும் முக்கியமான ஒரு தேர்தலாக கருதப்படுகின்றது காரணம் இந்த தேர்தலில் மாத்திரமே தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தி இருக்கின்றார்கள்.இந்த பொது வேட்பாளரை 83 சமூக கட்டமைப்புகளும் 10 தமிழ் தேசிய கட்சிகளும் இணைந்து இவரை நிறுத்தி இருக்கின்றது என்றால் இந்த பொது வேட்பாளர் என்பது கட்சி அரசியலுக்கு அப்பால் தமிழினத்தின் சார்பாக இவர் நிறுத்தப்பட்டிருக்கின்றார்.தமிழர்கள் ஒற்றுமையாக இந்த இடத்தில் பயணிக்க வேண்டும் ஒற்றுமையாக பயணிக்க வேண்டும் ஒரே குரலில் தங்களது பிரச்சினைகளை சர்வதேசத்திற்கும் உள்நாட்டிற்கும் செல்ல வேண்டும் எங்களுடைய தீர்வுகளையும் சொல்ல வேண்டும் என்கின்ற அடிப்படையில் இந்த தமிழ் பொது வேட்பாளர் சங்கு சின்னத்தில் அரியநேந்திரன் அவர்கள் நிறுத்தப்பட்டு இருக்கின்றார்.இந்த விடயத்தை கட்சி அரசியலுக்கு அப்பால் சென்று தமிழ் இனத்தின் கோரிக்கையாக வேண்டுகோளாக அவர்களுடைய பிரச்சனைகளை சொல்லுகின்ற கருவியாக பயன்படுத்த வேண்டும் எனவே நாங்கள் தமிழரசு கட்சியை சேர்ந்தவர்கள் எங்களுடைய அருள் வாக்கு கூறுகின்ற அருட்தந்தை யோசப் மேரி அடிகளார் அவர்கள் அருமையாக கூறினார் தந்தை செல்வா அவர்களின் காலத்தில் இருந்து பயணித்தவர் தளராத வயதிலும் கூட தமிழ் தேசியப் பற்றோடு தமிழ் உணர்வோடு இந்த தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்று அவர் கூறினால் நாங்கள் கேட்டு தான் ஆக வேண்டும் ஏனென்றால் அவர் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அரசியலில் தடம் புரளாமல் ஆன்மீகப் பணிகளும் சரி அரசியல் பணியிலும் சரி மிகவும் அருமையாக பணியாற்றியவர்.அவர் கூறுகின்றார் சங்கு சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும். தமிழர்களை அவர்களது பிரச்சனைகளை வெளி உலகத்திற்கு கொண்டுவர வேண்டும் என அவர் எடுத்துரைக்கின்றார். எனவே ஒரு மூத்த அருட்தந்தை அவர்களுடைய அருள்வாக்கு நாங்கள் பின்பற்றுவதற்கு நாங்கள் திட சந்தர்ப்பம் எடுத்து இருக்கின்றோம் எனவே நடைபெறுகின்ற 21 ஆம் தேதி நடைபெறுகின்ற இந்த தேர்தலில் தமிழர்கள் ஒற்றுமையாக இருக்கின்றோம் தமிழ் சமூகம் ஒற்றுமையாக இருக்கின்றோம் ஒரே குரலில் எங்களுடைய பிரச்சனைகளை கூறப்போகின்றோம். காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனை சர்வதேச விசாரணை வேண்டும் என்று கேட்டோம் உள்நாட்டு பொறிமுறை ஊடாக இந்த பிரச்சினைகளை தீர்க்கிறோம் எனக் கூறினார்கள் ஒன்றுமே நடைபெறவில்லை 15 ஆண்டுகளாக.அடுத்ததாக தொல்லியல் இடங்களை அடையாளப்படுத்துகின்றோம் எனக் கூறிக்கொண்டு எங்களுடைய கலாசார நிலையங்கள் அளிக்கப்படுகின்றது அந்த இடங்களில் விகாரங்கள் கட்டப்படுகின்ற செயற்பாடுகள் இடம்பெறுகின்றது அந்த இடங்களில் எல்லாம் பௌத்த விகாரைகள் இருந்தது என்று கூறிவிட்டு அந்த இடங்களை ஆக்கிரமிக்கின்ற செயல்பாடுகள் இடம்பெற்று கொண்டிருக்கின்றது.இன்றும் கூட பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படாமல் தமிழ் மக்களை யுத்தத்தின் பின்னரும் ஒடுக்குகின்ற அந்த சட்டத்தை அவர்கள் வைத்திருக்கின்றார்கள் எங்களுடைய தமிழ் கைதிகள் முழுமையாக இன்னமும் விடுதலை செய்யப்படவில்லை இது மாத்திரம் அல்லாமல் வடக்கு கிழக்கில் ராணுவத்தின் ஆக்கிரமிப்பு என்பது இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.மயிலத்தமடு மாதவனை இந்த மேச்சல் தரை இப்போதும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றார்கள் 365 நாட்களுக்கும் மேலாக அகிம்சை ரீதியாக வீதியில் இருந்து போராடிய அந்த கால்நடை வளர்ப்பாளர்களுக்கு எந்த ஒரு தீர்வும் இந்த ஜனாதிபதியால் கொடுக்கப்படவில்லை.100 நாட்களுக்கு மேலாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை முழுமையாகி தரவேண்டும் என போராடினார்கள் அதுவும் கேட்கப்படவில்லை.எட்டு ஜனாதிபதிகளின் ஆட்சிக் காலத்திலும் அவர்களுக்கு வாக்களித்து இருந்தும் கூட அவர்கள் எங்களை தாராளமாக ஏமாற்றி இருக்கின்றார்கள் இந்த ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தலிலும் கூட சில வேளைகளில் பொது வேட்பாளர் திறக்கப்படாமல் இருந்திருந்தால் நாங்கள் யாரோ ஒரு சிங்கள ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களித்து இருப்போம் ஆனால் முதல் தடவையாக இந்த வேட்பாளர் நிறுத்தப்பட்டு இருக்கின்ற போது அதே போன்று தமிழர்களின் பிரச்சினைகளை கோரிக்கைகளை வைத்து இறக்கப்பட்டிருக்கின்றார் இவ்வாறான ஒரு சூழ்நிலையில் நாங்கள் தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்க வேண்டிய தார்மீக கடமை எங்களுக்கு இருக்கின்றது அதனை விடுத்து மீண்டும் மீண்டும் ஏமாற்றப்படுவதற்கு நாங்கள் வழி கூறக்கூடாது.கேட்கின்றார்கள் இந்த வேட்பாளர் வெல்லப் போகின்றாரா என்று இவருக்கு வாக்களிப்பதால் என்ன கிடைக்கப் போகின்றது எனக்கு கேட்கின்றார்கள் நான் ஒன்றைக் கேட்க விரும்புகின்றேன் எட்டு ஜனாதிபதிகளுக்கு நாங்கள் வாக்களித்தோம் எதைப் பெற்றிருக்கின்றோம் ஒன்றையுமே அவர்கள் தரவில்லை அவர்களை வெற்றி பெற செய்திருக்கின்றோம் கடந்த நல்லாட்சி காலத்தில் மைத்திரிபால ஸ்ரீசேனா அவர்களை வெற்றி பெறச் செய்தோம் மஹிந்த ராஜபக்சே அவர்களை தோற்கடித்தோம் பின்னர் மைத்திரிபாலு என்ன செய்தார் 2018 ஆம் ஆண்டு நாங்கள் யாரை தோற்கடிக்க வேண்டும் என்று மைத்திரிக்கு வாக்களித்தோமோ அவர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை பிரதம மந்திரியாக வைத்துக்கொண்டு அவர் அழகு பார்க்கின்றார் பேச்சுவார்த்தை இடம்பெற்றது அரசியல் யாப்பு தருவோம் என கூறினார்கள் ஏமாற்றி விட்டார்கள்.சந்திரிகா அம்மையார் சமாதான தேவதையாக வந்தார் என்ன செய்தார் கடைசியாக அவரும் ஏமாற்றிவிட்டு சென்றுவிட்டார்.எனவே எங்களுடைய அரசியல் வரலாறு என்பது ஏமாற்றப்படுகின்ற வரலாறாக இருக்கின்றது அவர்கள் ஏமாற்றுகின்ற வரலாறாக காணப்படுகின்றது எனவே தமிழ் பேசும் மக்களுக்கும் தமிழ் சமூகங்களுக்கும் நாங்கள் கூறக்கூடிய விடயம் என்னவென்றால் வடக்கு கிழக்கு மாத்திரம் அல்ல அனைத்து மக்களும் எமக்கு தொலைபேசி அழைப்பின் மூலம் கூறுகின்றார்கள் நாங்களும் இவருக்கு ஆதரவு வழங்குவதற்கு சித்தமாக இருக்கின்றோம் என்று.எனவே நியாயத்தின் பேரில் உரிமையின் பேரில் நாங்கள் பதிக்கப்பட்ட சமூகம் என்பதன் பெயரில் நாங்கள் நீதியை நிலை நிறுத்துவதற்காக ஏமாற்றப்பட மாட்டோம் என்பதை எடுத்துக் கூறுவதற்காக எமக்கு ராயப்பு ஜோசப் ஆண்டகை கூறியது போன்று இறுதி யுத்தத்தின் போது ஒரு லட்சத்து 46 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டு இருக்கின்றார்கள் என்ற செய்தியை கூறி இருக்கின்றார் அவர் கூட அந்த இழப்புக்குரிய நீதியை பெற வேண்டும் என முயற்சித்தார் அவரும் கண்ணை மூடிவிட்டார் ஆனால் நீதி எங்களுக்கு கிடைக்கவில்லை.எனவே ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை அழகாக கூறியது உண்மையை கண்டறிய வேண்டும் அவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்று அடுத்ததாக மீண்டும் இவ்வாறான அவலங்கள் ஏற்படாமல் இனப்பிரச்சனைக்குரிய நிரந்தரமான தீர்வை பெற வேண்டும் என கூறுகின்றார்கள் எதுவுமே இடம்பெறவில்லை 15 வருடங்களாக யுத்தத்தின் பின்னர் எங்களை ஏமாற்றி இருக்கின்றார்கள்.மீண்டும் மீண்டும் நாங்கள் ஏமாறுவதற்கு தயாராக இல்லை இப்போது ஒரு கதை பேசப்படுகின்றது மீளபெற முடியாத அதிகாரத்தை தந்திருக்கின்றார் என்கின்ற ஒரு கதை அழகாக கூறப்படுகின்றது.மீளப்பெற முடியாத அதிகாரம் என்றால் எந்த விடயத்திற்கு மீளப்பெற முடியாத அதிகாரம் தரப்பட்டு இருக்கின்றது என கூற வேண்டும் சமஸ்டி ஆட்சி முறையில் மீளப்பெற முடியாத இந்த இந்த அதிகாரங்கள் தரப்பட்டிருக்கின்றது என கூற வேண்டும் இது மொட்டை கடிதம் எழுதுவது போன்று மீளப்பெற முடியாத அதிகாரம் தந்ததனால் அதற்குள் சமஷ்டி இருக்கின்றது என்று எங்களுடைய மக்களை ஏமாற்றுவதற்கு எம்மவர்கள் பார்க்கின்றார்கள் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement