• Nov 26 2024

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - நிலந்த ஜயவர்தன தொடர்பில் உச்ச நீதிமன்றம் அறிவிப்பு!

Chithra / Oct 7th 2024, 11:09 am
image

 

புலனாய்வுப் பிரிவினரின் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன, ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பில் இன்று  உச்ச நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்

இது தொடர்பான தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காததன் மூலம்  நிலந்த ஜயவர்தன அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளார் என தெரிவித்த உச்ச நீதிமன்றம், அவருக்கு 75 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குமாறும் முன்னர் உத்தரவிட்டிருந்தது.

ஆனால் அவர் நட்டஈட்டை முழுமையாகச் செலுத்தத் தவறியதால், நீதிமன்ற உத்தரவின்படி அவருக்கு எதிராக சட்டமா அதிபர் நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டைத் தாக்கல் செய்திருந்தார்

அது தொடர்பான உண்மைகளை முன்வைக்க இன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உச்ச நீதிமன்றம் முன்னர் விடுத்த அறிவித்தலின் பிரகாரம் நிலந்த ஜயவர்தன நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - நிலந்த ஜயவர்தன தொடர்பில் உச்ச நீதிமன்றம் அறிவிப்பு  புலனாய்வுப் பிரிவினரின் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன, ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பில் இன்று  உச்ச நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்இது தொடர்பான தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காததன் மூலம்  நிலந்த ஜயவர்தன அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளார் என தெரிவித்த உச்ச நீதிமன்றம், அவருக்கு 75 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குமாறும் முன்னர் உத்தரவிட்டிருந்தது.ஆனால் அவர் நட்டஈட்டை முழுமையாகச் செலுத்தத் தவறியதால், நீதிமன்ற உத்தரவின்படி அவருக்கு எதிராக சட்டமா அதிபர் நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டைத் தாக்கல் செய்திருந்தார்அது தொடர்பான உண்மைகளை முன்வைக்க இன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உச்ச நீதிமன்றம் முன்னர் விடுத்த அறிவித்தலின் பிரகாரம் நிலந்த ஜயவர்தன நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement