• Nov 26 2024

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களை எளிதில் ஏமாற்றி விடலாம் என்ற கொக்கரிப்புகள் எடுபட மாட்டாது- சுரேஷ் பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டு!

Tamil nila / Jul 29th 2024, 9:44 pm
image

ஜனாதிபதித் தேர்தலில்  தமிழ் மக்களை எளிதில் ஏமாற்றி விடலாம் என்ற கொக்கரிப்புகள் எடுபட மாட்டாது என ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இன்று ஊடகங்களுக்கு கருத்துத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்,

அவர் மேலும் தெரிவிக்கையில்  

நான் ஒரு விடயத்தை தெளிவாக  கூற விரும்புகிறேன் தமிழ் தரப்பிலிருந்து பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் கடந்த 6 மாதமாக பேசப்பட்ட பிறகு முக்கியமாக வடக்கு, கிழக்கை நோக்கிய  வருகை அவர்கள் யாராகவும் இருக்கலாம். அவர்கள் வந்து இங்கு கொடுக்கின்ற வாக்குறுதிகளை நாங்கள் பார்க்கின்றோம். 

கடந்த வருடங்களில் இவ்வாறு அவர்கள் வடக்கை நோக்கி வரவில்லை. இந்த வருடம் நாங்கள் பொது வேட்பாளரை நிறுத்தப் போகிறோம் என்று கூறிய  பிறகே வடக்கை நோக்கி வருகிறார்கள். 

தேர்தலுக்கு வேட்பு மனுத்தாக்கல்  செய்வதற்கு முன்பாகவே யாழ்ப்பாணத்தில் எங்கு பார்த்தாலும் அநாமதேய சுவரொட்டிகள் முளைக்கத் தொடங்கி விட்டன. 

யார் எதை செய்தாலும்  நாங்கள் ஒரு விடயத்தை தெளிவாக கூறுகிறோம். வடக்கு, கிழக்கு மக்கள் இவர்கள் பற்றி மிக தெளிவான சிந்தனைகளை கொண்டவர்களாக இருக்கிறார்கள். 

தமிழர் தரப்பில் பெரும்பான்மையான தமிழ் கட்சிகள் பொது வேட்பாளர் என்ற நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்கிறார்கள்.  அதைப்போல சிவில் சமூகத்தை சேர்ந்த பல பேர் இதனை ஏற்றுக்கொண்டு இதனை செயற்படுத்த வேண்டும் என்று இருக்கிறார்கள். 

எனவே தமிழ் மக்களை எளிதில் ஏமாற்றி விடலாம் என்ற கொக்கரிப்புகள் நிச்சயமாக எடுபட மாட்டாது. என்னைப்பொறுத்த வரையில் பொது வேட்பாளர் என்ற மாற்றம்  தேவையாக உள்ளது. 

இதனை உருவாக்குவது மூலமாகத்தான் தமிழ் மக்களது உரிமைகளை வென்றெடுக்க முடியும். ஆகவே ஒரு சிலர் மட்டுமே எதிரான கருத்துக்களை கொண்டிருக்கிறார்கள். இந்த விடயம் தொடர்பில் மக்கள் ஒன்றாக அணி திரளும் பொழுது இவர்கள் எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

தமிழ் தரப்பு இவ் விடயம் தொடர்பாக முடிவெடுத்தது தென்னிலங்கைக்கும் ஒரு அச்சுறுத்தலாகவே இருக்கிறது. எனவே இவர்கள் வடக்கை நோக்கி வருவதற்கு நாங்கள் எடுத்த முடிவே காரணம். எனவே தமிழ் தரப்பு முன்னோக்கி செல்கிறது என்பதே இதன் கருத்தாகும். இதை நான் முழுமையாக நம்புகிறேன்.என்றார் 

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களை எளிதில் ஏமாற்றி விடலாம் என்ற கொக்கரிப்புகள் எடுபட மாட்டாது- சுரேஷ் பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டு ஜனாதிபதித் தேர்தலில்  தமிழ் மக்களை எளிதில் ஏமாற்றி விடலாம் என்ற கொக்கரிப்புகள் எடுபட மாட்டாது என ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.இன்று ஊடகங்களுக்கு கருத்துத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்,அவர் மேலும் தெரிவிக்கையில்  நான் ஒரு விடயத்தை தெளிவாக  கூற விரும்புகிறேன் தமிழ் தரப்பிலிருந்து பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் கடந்த 6 மாதமாக பேசப்பட்ட பிறகு முக்கியமாக வடக்கு, கிழக்கை நோக்கிய  வருகை அவர்கள் யாராகவும் இருக்கலாம். அவர்கள் வந்து இங்கு கொடுக்கின்ற வாக்குறுதிகளை நாங்கள் பார்க்கின்றோம். கடந்த வருடங்களில் இவ்வாறு அவர்கள் வடக்கை நோக்கி வரவில்லை. இந்த வருடம் நாங்கள் பொது வேட்பாளரை நிறுத்தப் போகிறோம் என்று கூறிய  பிறகே வடக்கை நோக்கி வருகிறார்கள். தேர்தலுக்கு வேட்பு மனுத்தாக்கல்  செய்வதற்கு முன்பாகவே யாழ்ப்பாணத்தில் எங்கு பார்த்தாலும் அநாமதேய சுவரொட்டிகள் முளைக்கத் தொடங்கி விட்டன. யார் எதை செய்தாலும்  நாங்கள் ஒரு விடயத்தை தெளிவாக கூறுகிறோம். வடக்கு, கிழக்கு மக்கள் இவர்கள் பற்றி மிக தெளிவான சிந்தனைகளை கொண்டவர்களாக இருக்கிறார்கள். தமிழர் தரப்பில் பெரும்பான்மையான தமிழ் கட்சிகள் பொது வேட்பாளர் என்ற நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்கிறார்கள்.  அதைப்போல சிவில் சமூகத்தை சேர்ந்த பல பேர் இதனை ஏற்றுக்கொண்டு இதனை செயற்படுத்த வேண்டும் என்று இருக்கிறார்கள். எனவே தமிழ் மக்களை எளிதில் ஏமாற்றி விடலாம் என்ற கொக்கரிப்புகள் நிச்சயமாக எடுபட மாட்டாது. என்னைப்பொறுத்த வரையில் பொது வேட்பாளர் என்ற மாற்றம்  தேவையாக உள்ளது. இதனை உருவாக்குவது மூலமாகத்தான் தமிழ் மக்களது உரிமைகளை வென்றெடுக்க முடியும். ஆகவே ஒரு சிலர் மட்டுமே எதிரான கருத்துக்களை கொண்டிருக்கிறார்கள். இந்த விடயம் தொடர்பில் மக்கள் ஒன்றாக அணி திரளும் பொழுது இவர்கள் எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தமிழ் தரப்பு இவ் விடயம் தொடர்பாக முடிவெடுத்தது தென்னிலங்கைக்கும் ஒரு அச்சுறுத்தலாகவே இருக்கிறது. எனவே இவர்கள் வடக்கை நோக்கி வருவதற்கு நாங்கள் எடுத்த முடிவே காரணம். எனவே தமிழ் தரப்பு முன்னோக்கி செல்கிறது என்பதே இதன் கருத்தாகும். இதை நான் முழுமையாக நம்புகிறேன்.என்றார் 

Advertisement

Advertisement

Advertisement