ஒன்பது வயது சிறுவனின் காலில் ஏற்பட்ட காயத்திற்குப் பதிலாக மருத்துவர்கள் தவறாக அந்தரங்கப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்த சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் தெரிவிக்கையில் , "கடந்த மாதம் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் காலில் காயம் ஏற்பட்டது.
அவர் ஜூன் 15ம் திகதி அன்று ஷாஹாபூரில் உள்ள துணை மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
காயமடைந்த காலுக்குப் பதிலாக மகனின் அந்தரங்கப் பகுதியில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர்.
பின்னர், அவர்களது தவறை உணர்ந்த மருத்துவர்கள், காயமடைந்த காலில் மீண்டும் அறுவை சிகிச்சை செய்தனர்" என தெரிவித்துள்ளனர்.
சிறுவனின் காலுக்கு பதிலாக அந்தரங்கப் பகுதியில் அறுவை சிகிச்சை ஒன்பது வயது சிறுவனின் காலில் ஏற்பட்ட காயத்திற்குப் பதிலாக மருத்துவர்கள் தவறாக அந்தரங்கப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்த சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் தெரிவிக்கையில் , "கடந்த மாதம் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் காலில் காயம் ஏற்பட்டது.அவர் ஜூன் 15ம் திகதி அன்று ஷாஹாபூரில் உள்ள துணை மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.காயமடைந்த காலுக்குப் பதிலாக மகனின் அந்தரங்கப் பகுதியில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர்.பின்னர், அவர்களது தவறை உணர்ந்த மருத்துவர்கள், காயமடைந்த காலில் மீண்டும் அறுவை சிகிச்சை செய்தனர்" என தெரிவித்துள்ளனர்.